24 அர்த்தங்களுள்ள ஒற்றைச் சொல் “ஐ”


nanjil_nadan11

24 அர்த்தங்களுள்ள ஒற்றைச் சொல் “ஐ”

சங்கு ஜுலை 2015 இதழில் நாஞ்சில் நாடனின் கட்டுரை “ஐ” என்னும் ஒற்றைச் சொல் பற்றியது. தலைவன், தந்தை, கணவன், அரசன்,கடவுள், தமையன், மனைவி சந்தேகம், அழகு, நுண்மை, வியப்பு, கோழை, இருமல், பெருவியாதி, சவ்வீரம் என்னும் நஞ்சு, மந்தாரம், ஊண்,கை, திசாமுகம், மலைஉச்சி, கடுகு, தும்பை, சர்க்கரை, ஐந்து என மொத்தம் 24 பொருள் உணர்த்த வல்லது ஐ என்னும் ஒற்றைச் சொல். தமிழ்ப்பேரகராதியின் அடிப்படையில் எடுத்துரைக்கிறார் நாஞ்சில்.

பண்டைய இலக்கியங்களில் ஐ தனிச் சொல்லாக வந்திருப்பதற்கு “படைச்செருக்கு” அதிகாரத்தின் 771 குறளை மேற்கோளாகக் காட்டுகிறார்:

என்னை முன் நில்லன் முன்தெவ்விர் என்னை
முன்னின்றுகல் நின்றவர்

இந்தக் குறளை ஐ தனித்து நிற்கும் இடங்களோடு பிரித்து எழுதினால்-

என் ஐ முன் நில்லன் மின் தெவ்விர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்

தன் தலைவனின் வீரத்தை ஒரு வீரன் விளக்கி ஒரு எச்சரிக்கை செய்கிறான் எதிரிகளுக்கு- பகைவர்களே! என் தலைவன் முன் வராதீர்கள். அங்கே தெரிகின்ற நெடுங்கற்களெல்லாம் என் தலைவனோடு போருக்கு முற்காலத்தில் வந்த எதிரிகளே.

நவீனத்துவம் எழுதும் நாஞ்சில் பண்டைய இலக்கியத்தில் இருந்து ஒரு முக்கியமான சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி கூறத் தான் வேண்டும். நல்ல தமிழ் என்பது தமிழ்ப்படங்களில் கிண்டலுக்கும் நகைச்சுவக்கும் ஆளாவது. நகைச்சுவையில் கண்டிப்பாக ஒரு அரசியலும், வெகுஜன ரசனையை கீழ் மட்டத்தில் வைக்கும் ஒரு முயற்சியும் எப்போதும் இருக்கும்.

இதற்கு மாற்றாக கொச்சைத் தமிழ், சென்னைத் தமிழ், தாதாத் தமிழ், டாஸ்மாக் தமிழ் பேசும் படிக்காதமேதையான ஒரு கதாநாயகன் வெற்றி வீரனாகக் காட்டப் படுகிறான். நாம் தமிழ் வெகுஜனம் தன் ரசனையை, தன் புரிதலில் விளிம்புகளை மிகவும் குறுகியதாக, மலினப் படுத்தப் பட்டதாக வைத்துக் கொள்வதில் குறியாக இருக்கிறோம். பொதுவாக நல்ல தமிழ், இலக்கியத் தமிழ் தேவையற்றது என்னும் பிற்போக்கான அணுகுமுறை எதிர்ப்பில்லாமல் இயங்கி வருகிறது.

சினிமாக்காரர்களை நான் விட்டு வைப்பதே இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால், வேறு ஒரு உதாரணம் தருகிறேன். உங்கள் வீட்டில் உங்கள் கையில் காலச்சுவடு, உயிர்மை அல்லது தீராநதி வைத்திருக்கிறீர்கள். நான் உறுதிபடச் சொல்வேன் அவர் உங்கள் உறவினர் அல்லது சக ஊழியர் என்றால் உடனே தேவையில்லாமல் உங்களையும் இந்த இலக்கியப் பத்திரிக்கைகளையும் விசித்திரமானவர்களாகவும் மற்றும் இந்த வாசிப்பு கிறுக்குத்தனமானதும் பயனற்றதும் என்பதாய் ஒரு வளர்த்து வளர்த்தாமல் நகரமாட்டார். இதற்கு அடிப்படைக் காரணம் சிந்தனை, தரமான எழுத்து, சிக்கலான பிரச்சனைகளை அலசும் கட்டுரைகள், புரிதலுக்கு விருந்தாகும் கவிதைகள், கதைகள் இவற்றைக் கண்டு ஒரு ஒவ்வாமையும் இவை நமக்கு ஒத்து வராது என்னும் தாழ் உணர்ச்சியும் உள்ள படித்தவர்கள் நிறைய பேர்.

ஆனால் சாதாரண வாசகர்கள் பலர் காலச்சுவடை என்னிடம் இரவல் வாங்கி அட்டை முதல் அட்டை வரை வாசிப்பதை நான் பார்த்திருக்கிறேன். தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் நீங்கள் குண்டூர் தாண்டினாலே தமிழ்ப்பத்திரிக்கை கிடைப்பது சந்தேகமே. நான் கனவு, சங்கு, இலக்கியச் சிறகு மற்றும் மேற்குறிப்பிட்ட இலக்கியப் பத்திர்க்கைகள் சகிதமாகத்தான் டெல்லிக்குப் பயணிப்பேன். இரவல் வாங்கியவர்களில் பெரும்பான்மையினர் திருப்பித் தராமல் வாசித்ததே உண்மை.

திரும்பவும் நாஞ்சிலிடம் வருவோம். அவரது கட்டுரை நமக்கு நம் தாய்மொழியில் ஒரு புதிய கதவைத் திறக்கிறது. நமக்கு மிகவும் ஒரு உருப்படியான விஷயஞானம் கிடைத்த திருப்தி ஏற்படுகிறது.

இந்த ரசனை நம் வெகுஜனத்திடம் கட்டாயம் இருக்கிறது நீறு பூத்த நெருப்பாய்.

நாஞ்சில் நாடனும் தான் சரி, சங்கர் ஐ படம் எடுக்கும் முன் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கக் கூடாது? அந்த அறிவுஜீவி புகுந்து விளையாடி இருக்க மாட்டாரா?

(image courtesy:nanjilnadan.com)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை, திருக்குறள் and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s