ஓரிடம் மலையாளத் திரைப்படம்


download

ஓரிடம் மலையாளத் திரைப்படம்

ஜெயகாந்தனின் எழுத்துக்களின் மீது எனக்கு ஈர்ப்பும் மரியாதையும் இருந்தாலும் சில​ கடுமையான​ விமர்சனக் கருத்துகளும் உண்டு. விலைமாதர்கள் என்று சமூகத்தில் பாலியல் தொழிலாளிகள் இருப்பது ஜெயகாந்தன் மற்றும் பல​ மூத்த எழுத்தாளர்களால் மிகவும் சகஜமான​ சர்வ​ சாதாரணமான​ ஒன்றாக​ எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவர்களில் புத்திசாலியாகவும் அறிவுஜீவியாகவும் இவர்களுடன் விவாதிக்கும் பெண்கள் வேறு உண்டு. பரிவே இல்லாத ஆணாதிக்க​ மனோபாவமே இது.

பாலியல் தொழிலுக்கு கடத்தப் பட்டும், கட்டாயப் படுத்தப் பட்டும் மட்டுமே பெண்கள் வருகின்றனர். ஒரு நாளும் அவர்கள் அதில் தொடர​ விரும்புவதே இல்லை. அன்றாடம் வலியையும் வன்முறையையும் சமூகத்தின் கடுமையான​ நிராகரிப்பையும் எதிர்கொண்டு இழிவான​ வாழ்க்கைக்குக் கட்டாயப் படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு உரிமை என்று பேசும் தன்னார்வக் குழுக்கள் நிறுவனங்கள் உண்டு. அவர்களுக்கு விடுதலை- இந்தத் தொழிலே ஒழிய​ வேண்டும் என்று பேசுவோர் வாதிடுவோர் யாருமே கிடையாது.

இதை ‘ஓரிடம்’ திரைப்படம் விமர்சிக்கிறது. முக்கியமான​ கதாபாத்திரங்கள் மூன்று பாலியல் தொழிலாளிகள். ஒருத்தி நடுவயது கடந்தவள். மற்ற​ இருவர் இளவயதினர். இந்த இருவரில் ஒருத்திக்குக் குழந்தை உண்டு. தன்னைப் போல் தன் மகளும் ஆகிவிடக் கூடாது என்பதால் குழந்தையை ஒரு காப்பகத்தில் வைத்து வளர்க்கிறாள். மற்றொருத்தி வேலை தேடி அலைகிறாள். ஆனால் அவளின் பின்னணி தெரிந்த​ யாருமே வேலை தர​ முன்வருவதில்லை. ஒரு காட்சியில் தன்னார்வ​ நிறுவன​ ஊழியர் ஒருவர் “இது கண்ணியமான​ தொழிலே உங்கள் உரிமைகள் வேண்டி நீங்கள் போராட​ வேண்டும் ” என்று வாதிடுகிறார். ஒரு ஆவணப் படத்துக்காக​ அவர்களை பேட்டி எடுக்கும் போது வேலை தேடித் தோற்ற​ பெண் “நீங்கள் யாருமே எங்கள் நிலை மாற​ வேண்டும் என​ விரும்பவில்லை” என்று குமுறுகிறாள். காப்பகக் குழந்தையின் தாய் ஒரு விபத்தில் உயிர் துறக்கிறாள். தன்னார்வ​ நிறுவனம் அந்த​ 8 வயதுக் குழந்தையை தத்தெடுக்க​ முன்வரும் ஒருவருக்குக் கொடுக்க​ விரும்புகிறது. இவள் தன் தோழியின் இடத் தில் தான் இருந்து வளர்க்க​ முடிவெடுக்கும் இடத்தில் கதை நிறைவடைகிறது.

வேலை தேடும் பெண்ணாக, முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் கீது மோகன்தாஸ் தமது பாத்திரத்தை மிகையே இல்லாமல் மிகவும் யதார்த் தமாக​ நடித் திருக்கிறார். தாய்மை அடையும் போது மகிழ்ச்சியில், அரபு நாடுகளில் வேலை வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றுபவனிடம் பணத்தைப் பறிகொடுக்கும் அசட்டுத்தனத்தில், காதலில் நம்பிக்கையில்லை என்று தன் தந்தை வயது வாடிக்கையாளரிடம் பேசும் போது, அவரை மகள், மனைவியுடன் கடைவீதியில் பார்க்கும் போது முதிர்ச்சியான​ இயல்பான​ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குனர் பிரதீப் நாயர் இன்னும் சற்று முயன்றிருந்தால் விலைமாதுகளை உருவாக்கும் சமூகத்தின் உள்ளார்ந்த​ ஆணாதிக்க​ மனோநிலையையும் கதையின் முக்கிய​ அங்கமாக்கி இருக்க​ முடியும். இருந்தாலும் கதையின் மையக்கரு ஆழ்ந்த​ மனிதநேயம் கொண்டது.

பல​ விருதுகளை இந்தப் படம் வென்றது:

1.Special Jury Award in Direction-52nd National Film Awards. 2.Special Jury Award in Direction-Kerala State Film Awards. 3.Best Actress-Kerala State Film Award s. 4.Best Background Score- Kerala State Film Awards 5.Best Costume Design – Kerala State Film Awards. 6.Best Film Processing-Kerala State Film Awards. Kerala Film Critics Association Awards-Director,Actress,Sound Mixing.

டிடி பாரதி தொலைக்காட்சியில் 18.7.2015அன்று எதேச்சையாகப் பார்த் தேன். அவர்களுக்கு நன்றி.

(award details courtesy:wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s