Monthly Archives: August 2015

ஸ்பரிஸம்


ஸ்பரிஸம் சத்யானந்தன் நான் சிந்தனையில் இருந்து மீண்ட​ போது அந்தப் படகு இல்லை என் பார்வையின் வீச்சுக்கு அப்பால் அது போய் விட்டது எழுந்து நின்று கரையோரம் நீள​ நடந்து அந்த​ மேட்டில் ஏறி படகைத் தேடலாம் கவனத்தைக் கடலின் ஆர்ப்பரிப்பு கலைக்கிறது ஆக​ உயரமாய் எழும்பும் அலை வந்து மோதி ஈரமணலை விரித்து மறைகிறது … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

லாஜ் (வெட்கம்)- அஸ்ஸாமிய மொழித் திரைப்படம்


லாஜ் (வெட்கம்)- அஸ்ஸாமிய மொழித் திரைப்படம் 2004ல் வெளிவந்தது மஞ்சு போரா என்னும் இயக்குனரின் லாஜ் (Laaz) அஸ்ஸாமிய மொழித் திரைப்படம். கதை பள்ளிக்குப் போக விரும்பும் ஒரு பத்து பதினோரு வயதுச் சிறுமியின் போராட்டத்தை மையப்படுத்திய கதை. மீனவக் குடும்பத்தில் அப்பாவுக்கு கடுமையான இருமல் மற்றும் இரைப்பு நோய். மூன்று குழந்தைகளில் மூத்தவள் இவள். … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , | Leave a comment

ஆண்டாள் எழுத்து பின் நவீனம் – தேவதச்சன் நேர்காணல்


ஆண்டாள் எழுத்து பின் நவீனம் – தேவதச்சன் நேர்காணல் இந்த வருட 'விஷ்ணுபுரம் விருது' தேவதச்சனுக்கு வழங்கப் படுவதை ஒட்டி எஸ்.ராமகிருஷ்ணனின் இணைய தளத்தில் தேவதச்சன் நேர்காணல் மற்றும் அவரது பதினைந்து கவிதைகல் வெளியாகி இருக்கின்றன. தேவதச்சனை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். அவருடைய நேர்காணலை நான் மிகுந்த உற்சாகத்துடன் அணுகினேன். அதற்குக் காரணம் கவிஞர்கள் தம் மனதைத் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged | Leave a comment

ஆகாயத்திண்டே நிறம்-மலையாள திரைப்படம்


ஆகாயத்திண்டே நிறம்-மலையாள திரைப்படம் “ஆகாயத்தின் நிறம் என்ன?’ வயது முதிர்ந்த சிற்பி கேட்கிறார் “நீலம்” என்கிறான் சிறுவன். “வேறு?” “சில சமயம் சிவப்பு… சில சமயம் வெள்ளை” “கண்களை மூடிக் கொள்…” மூடிக் கொள்கிறான்.. “இப்போது?” “கருப்பு…..” “ஆகாயத்தை நாம் நம் மனம் கற்பனை செய்யும் வண்ணங்கள் எதிலும் காண இயலும் …வாழ்க்கையும் வண்ணமயமாய் இருப்பது … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged , , , , | Leave a comment

இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை


இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை பாறப்புரத்துவின் “சூறாவளிக் காற்றுக்கும் நெருப்பு குண்டுகளுக்கும் மத்தியில்” என்னும் சிறுகதையின் மொழி பெயர்ப்பு ‘இனிய உதயம்’ ஆகஸ்ட் 2015 இதழில் முதலில் ஒரு எளிய சரடுள்ள கதையாகவே தோன்றியது. பிரிட்டிஷ் ராணுவத்துடன் செல்லும் இந்திய (பிரிட்டிஷ்) பகுதி சிப்பாய்கள்களில் ஒருவன் எகிப்தியப் பெண் ஒருத்தியைக் … Continue reading

Posted in சிறுகதை, விமர்சனம் | Tagged , , | Leave a comment

வேலைவாய்ப்புத் தேடும் பெண்கள் கடத்தப் படுவது


வேலைவாய்ப்புத் தேடும் பெண்கள் கடத்தப் படுவது யூஏஈ நாட்டில் வேலை வாய்ப்புத் தேடிச் சென்ற​ பெண் கடத்தப்பட்டு பிணைக் கைதியாக​ அடைத்து வைக்கப் பட்டார். அவருடைய​ சகோதரர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ‘ட்வீட்’ செய்தி அனுப்பியதும் இந்தியத் தூதரகம் அந்த​ நாட்டில் இருந்து இந்த​ இளைஞரிடம் தொடர்பு கொண்டு காவல் துறை மூலம் நடவடிக்கை … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , | Leave a comment

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி”


சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி” சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி” என்னும் திட்டம் ஒன்று துவங்கப் பட்டது என்பதை ‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையிலிருந்து தான் நான் தெரிந்து கொண்டேன். பெரிய விளம்பரம் விழா இல்லாமல் இது துவங்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. “பிரிட்டிஷ் கவுன்சில்” ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஆளுமை, விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழிப்புலமையில் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , | Leave a comment

தமிழ் நாட்டின் பாராம்பரிய உணவின் மகத்துவம்- காணொளி


தமிழ் நாட்டின் பாராம்பரிய உணவின் மகத்துவம்- காணொளி ஒரு மருத்துவர் நமது தேங்காய் சட்டினி முதல் பல உணவு வகைகளின் சத்து மற்றும் மருத்துவ குணங்களை விளக்கி நிகழ்த்தும் காணொளியை என்னுடன் பகிர்ந்த வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி. நம் பாரம்பரிய உணவுகளில் விதிவிலக்காக இன்றைய வாழ்க்கை முறைக்கு ஒத்துவராதவையும் உண்டு என்பதையும் குறிப்பிட்டதால் அவரது … Continue reading

Posted in காணொளி | Tagged | Leave a comment

முக்கோணம்


முக்கோணம் சத்யானந்தன் சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல் எல்லாம் புறத்தில் தீர்மானிக்கப்படும் திசையில் தற்காலிக சகபயணி எதிர்ப்பயணி யாவரும் ஒரு அமைப்பின் பன்முகங்கள் உன் உரிமை … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged , , | Leave a comment

டாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல்


டாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல் 2007ல் வெளியான​ ” டாட்டூ – கன்னடத் திரைப்படம்” தூர்தர்ஷனின் தொலைக்காட்சியில் 23.8.2015 அன்று ஒளிபரப்பானது. சிவருத்ரய்யா என்னும் இயக்குனரின் இந்தப் படம் மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் போலவே ராமாயணத்தின் ஒரு பகுதியை அதாவது “பெண் கடத்தலை” மையமாகக் கொண்டது. எடுத்துக் கொண்ட​ கருவின் கனத் … Continue reading

Posted in சினிமா விமர்சனம். | Tagged | Leave a comment