ஜெயமோகன்- சுப.உதயகுமார் கவனிக்க
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து உதயகுமார் போராட்டம் நடத் திய போது அப்துல் கலாம் அறிவியலில் மேதையென்றாலும் அணு உலை பற்றி அறியவில்லை அதனாலேயே அதைப் போய் ஆதரித்தார் என்று நாம் புரிந்து கொண்டோம். ஜெயமோகனே முன்நின்று ஆதரித்த போது நமக்கு மேலும் அந்தப் புரிதல் உறுதிப் பட்டது. இப்போது செண் டை என்னும் இடத்தில் அணு உலையை மீண்டும் ஜப்பான் இயங்கச் செய்துள்ளது. பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டதால் அது இயக்கப் பட்டது என ஜப்பான் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. உதயகுமார், ஜெயமோகன் இருவரும் இந்த மாதிரி ஜப்பானே செய்தால் காலப் போக்கில் அது தமிழ் நாட்டை எந்த அளவு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு விரைவில் தம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் இதை எழுதுகிறேன்.
இது பற்றிய ஜெயமோகனின் முக்கியமான கட்டுரை:
கூடங்குளம் இடிந்தகரைக்குச் சென்றோம்
எனது கட்டுரைகள்:
கூடங்குளம் – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால்
பலூன் ஊதிய விளையாட்டான இரண்டு பேரியக்கங்கள்
(image courtesy:jeyamohan.in)