பனட நெரலு -கன்னடத் திரைப்படம்- மரங்களைக் குழந்தைகளாக நேசிக்கும் தாய்


2015 - 1

பனட நெரலு -கன்னடத் திரைப்படம்- மரங்களைக் குழந்தைகளாக நேசிக்கும் தாய்

இயக்குனர் உமாசங்கர ஸ்வாமியின் படைப்பான பனர நெரலு திரைப்படம் 2008 டிசம்பர் மாதம் வெளியானது. 2009க்கான சிறந்த சமூக அக்கறை நிறைந்த படமாக இது விருது பெற்றது.

பி.ஜெயஸ்ரீ என்னும் கன்னட நாடகத்தின் புகழ் பெற்ற கலைஞர் பனவ்வா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மிகவும் நேரடியாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் கதை மரங்களையும் வனங்களையும் நேசிக்கும் ஒரு பாட்டியை மையமாகக் கொண்டது. பனவ்வா வறுமையின் காரணமாக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை அமரீஷப்பா என்னும் இளைஞனின் மாமனாரிடம் பல வருடங்கள் முன்பு விற்று விட்டார். அதன் கணிசமான தொகை அவரது வயிற்றுப்பாட்டுக்கும் கடன்களை அடைப்பதற்கும் செலவாகி விட்டது. சிவில் எஞ்சினீயராக அரசு ஒப்பந்தங்களை ஏற்றுத் தொழில் செய்தவன் தன் மாமனாரது ஊரில் திராட்சைத் தோட்டம் அமைக்கும் எண்ணத்துடன் அவரது கிராமத்து வருகிறான். வங்கியிடம் ஒருபக்கம் கடன் வாங்கி, மரம் விற்பவரிடம் முன்பணம் வாங்கி அவன் இரண்டு அடி எடுத்து வைத்து மரங்களை வெட்ட ஆட்கள் வரும் போது பனவ்வா வெட்டக் கூடாது என்று வாதிடுகிறார். கோட்டை ஒன்றின் உள்ளே இருக்கும் கிராமம் அது. கோட்டை மதில் மீது ஏறி அந்தப் பாட்டி கீழே விழுந்து சாவேன் என்று பயமுறுத்துகிறார். மற்றொரு முறை கிணற்றில் குதித்து பயமுறுத்துகிறார். இதற்கு இடையே ஒரு அரசியல்வாதி வன இலாகா மூலம் அமரீஷ் மரம் வெட்டுவதைத் தடைசெய்து பாட்டியிடம் “நான் உங்கள் நிலத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று இடையே புகும் போது அவனை அவர் தலையிட அனுமதிக்காமல் தொடர்ந்து போராடுகிறார். அம்ரீஷ் லஞ்சம் கொடுத்து அந்தத் தடையை உடைக்கிறான். அரசியல்வாதி அடுத்த கட்டமாக இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று நிலை நாட்ட முயல்கிறார். அதற்கான நில அளவை நடக்கும் போது ஒரு மரத்தில் பனவ்வா தூக்கு மாட்டித் தொங்குகிறார். அப்போது அவரை அமரீஷும் பிறரும் மீட்கின்றனர். அன்று அவருக்கு காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப் படுகிறது. அமரீஷ் அவன் மனைவி இருவரும் பாட்டியை கவனிக்கின்றனர். அவரை அவன் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இட்டுச் செல்கிறான். அங்கே பாட்டிக்கு அதிர்ச்சியால் குரல் போய்விட்டது தெரிய வருகிறது. பாட்டி உடல் நலம் தேறினாலும் ஊமையாகவே ஊரில் உலவுகிறார். மக்களுக்கு அவர் மரங்களை நேசிக்கும் தீவிரம் புரிகிறது. அமரீஷிக்கு முன்பணம் கொடுத்த மரக்கடைக்காரர் காவல் துறையுடன் மரத்தை வெட்ட வருகிறார். அன்று பிறபெண்களுடன் வனத்தில் ஒரு கொண்டாட்டம் (கதையில் தலைப்பின் பொருள் அதுவே) நடத்துகிறார். அது நாட்டுப்புற விழா. அதனால் வெட்ட வந்தவர்கள் திரும்பி விடுகிறார்கள். அன்று இரவு லாந்தர் விளக்குடன் வனத்தைக் காக்கும் பாட்டி ஒரு மரத்தடியில் உயிர் நீக்கிறார். ஊரே அவர் மரங்களை நட்டதை, காத்ததை நினைவு கூருகிறது. அவரை அந்த வனத்திலேயே புதைத்து விடுகிறார்கள்.

கதையின் மிகப்பெரிய பலம் மரங்களைக் குழந்தைகளாக நினைக்கும் தாய்மையின் வடிவமான பனவ்வா கதாபாத்திரம். நில அளவைக்காரரிடம் பாட்டி கேட்கிறார் “இந்தப் பறவைகளின் சத்தத்தை உன்னால் அளக்க முடியுமா?” அவன் விழிக்கிறான். “உனக்கும் எனக்கும் 6க்கு 3தான் இறுதியல் நில அளவு” என்று நெத்தியடியாகப் பேசுகிறார்.

அமரீஷ் மற்றும் கிராமத்தினர் அந்தப் பாட்டியைக் கண்டு எரிச்சலுற்றாலும் அவரது நலம் பற்றிக் கொள்ளும் கவலையில் உள்ள மனித உறவு நம்மை நெகிழ்த்துகிறது. அமரீஷ் தன் மகனுக்குப் பறவைகளைக் காட்டிய பிறகு மனம் மாறும் காட்சியும் ஆழமானது.

கிராமப்புற வழிபாடுகள் நாட்டுப்புறப் பாடல்களால் படம் செறிவாக எடுக்கப் பட்டுள்ளது. நல்லவர் கெட்டவர் என இரு வகைப்பாத்திரப் படைப்பு படத்தின் செய்தியை நீர்க்க அடிக்கிறது. நல்ல சினிமா என்னும் பாராட்டைக் கண்டிப்பாகப் பெறும். டிடி பாரதி தொலைக்காட்சியில் 15.8.2015 அன்று மாலை ஒளிபரப்பானது.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s