காணொளிக்கான இணைப்பு —-> அழகிய கம்பீர கோவா- காணொளியில்
லதா மங்கேஷ்கர் ஹிந்தி மொழிக்காரர் அல்லது மராட்டியர் என்றே நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். கோவா சென்றிருந்த போதே மங்கேஷ்கர் என்னும் அவருடைய கிராமத்துக்குச் சென்ற போது அவர் கொங்கண் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். கோவா செல்வோருக்கு எனது அறிவுரை ஒன்றே. வெய்யில் நாட்களில் அங்கே “கசகச” என ஈரப்பதமும் வெப்பமும் மிகுந்த தட்பவெட்பம். மே ஜீன் அவ்வாறிருக்கும்.. ஜுன் முடிவு முதல் ஆகஸ்ட் வரை கடுமையான மழை. செப்டம்பர் அக்டோபர் தொடங்கி மார்ச் வரை ஏற்ற காலம். டிசம்பர் ஜனவரி போன்ற குளிர் நாட்களில் கண்டிப்பாக தட்ப வெட்பம் மனதுக்குப் பிடிக்கும். மலை, காடு, கடல் என மூன்றும் ஒன்றாயிருக்கும் அழகிய நிலப்பகுதி கோவா.
பகிர்ந்து கொண்ட என் நண்பர் ஷரத் ஸாவந்த்க்கு நன்றி.