ஜாதிக்கேற்ப​ தண்டனை மாறும்


download

ஜாதிக்கேற்ப​ தண்டனை மாறும்

“நம்பாத்து சாம்பார்” என்று விளம்பரங்கள் ஜாதி அடுக்கின் அடிப்படையிலான​ சமூக​ உளவியலைக் குறி வைக்கின்றன​. ஆகஸ்ட் 2015ல் வந்துள்ள காலச்சுவடு இதழில் ஆ.சிவசுப்ரமணியனின் “இடைக்காலத் தமிழக வரலாற்றில் கோவில் திருட்டுக்கள்” என்னும் கட்டுரை மிகவும் முக்கியமான​ ஆராய்ச்சிக் கட்டுரை.

கோயில் கல்வெட்டுக்களில் உள்ள​ திருட்டு சம்பந்தமான​ குறிப்புக்களின் அடிப்படையில் ஜாதிக்கு ஏற்றது போல​ தண்டனையின் கடுமை வேறு படுவதைக் கட்டுரை தெளிவு படுத்துகிறது. ஏழு உதாரணங்களை கட்டுரை முன் வைக்கிறது. சாராம்சமாக​ நாம் அறிவது (கட்டுரையில் உள்ளபடி):
—————————————————————–
கல்வெட்டுக்கள் உணர்த்தும் உண்மை

இதுவரை பார்த்த ஏழு கல்வெட்டுக்களும் (1) நைவேத்தியப் பொருள் (2) பொன் (3) பொன் அணிகலன் (4) மரம் (5) அரிசி (6) பூசைப் பொருட்கள் ஆகியனவற்றைத் திருடியுள்ளதைக் குறிப்பிடுகின்றன. கையூட்டு வாங்கிக் கோயில் கணக்கில் மோசடி செய்தது ஒரு கல்வெட்டில் (குற்றச்செயல்: ஏழு) இடம்பெற்றுள்ளது.

இச்செயல்களைச் செய்தோருக்குப் (1) பூசை செய்யும் உரிமையைப் பறித்தல் (2) தண்டம் விதிப்பு (3) பணத்தைக் கையாளும் பணியைத் தராமை (4) சொத்துகளைப் பறிமுதல் செய்தல் ஆகிய தண்டனைகளை விதித்துள்ளனர்.

குற்றச்செயலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னவென்பது தெரியவில்லை. குற்றம் செய்ததைக் கண்டறிய காய்ச்சிய இரும்பைக் கையில் பிடிக்கும் சோதனை முறைக்குச் சிலர் ஆளாகியுள்ளனர். (குற்றச்செயல்:ஆறு) ஆனால் குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்னர் சொத்துகளைப் பறித்தல் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இவை அனைத்திலும் உள்ள ஒற்றுமைக் கூறு உடலை வருத்தும் தண்டனை எதுவும் வழங்கப்படாமையாகும்.

ஆனால் இதற்கு நேர்மாறாக இறைவியின் மீது சாத்தியிருந்த பட்டைக்காறை என்ற பொன் அணிகலனைத் திருடிய குடுமியான் மலை குடுமிநாதர் கோவில்பரிகலத்தாரில் (வேலையாட்களில்) ஒருவரான கைக்கோளர் தித்தியாண்டி சலம்பன் என்பவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வைக் கூறும் கல்வெட்டு (ஈ.P.ஷ்.867) ‘பண்டாரத்திலே காவல் பண்ணி ஒரு கையும் ஆய்க்கினை பண்ணிக் காணியாட்சியும் இழக்கப்பண்ணி ஊர்விட ஓட்டி’ என்று குறிப்பிடுகிறது.

இக்கல்வெட்டுத் தொடரின் அடிப்படையில் பார்க்கும்போது காவலில் வைத்துப் பின் கையை வெட்டியுள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக நிலவுடைமையைப் பறித்து ஊரைவிட்டுத் துரத்தியுள்ளார்கள். ஒரு குற்றத்திற்கு நான்கு வகையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

குற்றத்தின் தன்மையைக் கணக்கில் எடுக்காமல், குற்றம் செய்தவனின் சாதி – பொருளியல், சமூகத்தகுதி ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டே நீதி வழங்கப்பட்டமை இக்கல்வெட்டால் வெளிப்படுகிறது.

———————————–

வருணாசிரம​ தரும​ அடிப்படையில் தண்டனையில் இருந்தும் சலுகை பெற்றது பிராமணர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் பிற​ மேல் ஜாதியினர். இல்லையா? ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த நிலை அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தலித்துக்கள் இவற்றை எதிர்த்துக் குரல் கொடுத்தே இருந்திருக்க வேண்டும். கல்வெட்டில் அவை இடம் பெற வாய்ப்பே இல்லை. தலித் அல்லாதோரில் ராமானுஜர் காலத்தில் அவரும் சிலரும் ஜாதி ஏற்றத்தாழ்வை எதிர்த்துச் சில முன்னகர்வுகளை நிகழ்த்தினார்கள். ஆனால் எல்லாக் காலத்திலுமே ஏற்றத் தாழ்வை ஒழிக்க நினைத்தவர்கள் சிறுபான்மையே. பின்னாளில் இரட்டைமலை சீனிவாசன் தொடங்கிப் பல தலித்துக்கள் குரல் ஓங்கவே அம்பேத்கர் என்னும் பிரம்மாண்ட ஆளுமை தேசிய அளவில் மையமாகவே தங்கள் நிலைப்பாட்டை சற்றே மாற்றிக் கொண்டார்கள் மேல்ஜாதியினர். ஆனால் மனப்பாங்கு மாறவே இல்லை. அரசியல்வாதிகள் ஒரு கோஷத்துக்காக எடுத்து எடுத்து சமூக​ நீதி என்னும் வார்த்தை அரசியல்வாதிகளால் கடத்தப் பட்ட​ ஒன்றாகி விட்டது.

அதிகாரமும் மரியாதையும் உள்ள​ பதவிகள் தொழில்கள் கீழ் ஜாதிக்காரர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் காலம் காலமாக​ மறுக்கப் பட்டே வந்திருக்கிறது. இதை அரசியல் நிர்ணயச் சட்டம் உறுதி செய்த​ இட​ ஒதுக்கீடு ஒரு அளவுக்கே சரி செய்திருக்கிறது. யார் உயர் ஜாதிப் பிறப்பால் பயன் அடைந்தார்களோ அவர்களுடைய​ இன்றைய​ தலைமுறை இந்த​ ஏற்றத் தாழ்வு பிறப்பின் அடிப்படையில் தொடருவது கேவலம் என்பதை உணர​ வேண்டும். பாரம்பரியமான​ ஆதிக்க​ மனப்பாங்கு முற்றிலும் மாற​ வேண்டும்.

சமூக​ ஊடகங்கள் மற்றும் எந்த​ சமூக​ ஒன்று கூடுதலிலும் சமூக​ நீதியை உறுதி செய்வது ஒரு கடமை என்னும் மனப்பாங்கு வெளிப் பட​ வேண்டும். அந்த​ மன​ மாற்றம் எழுத்தாளர்களாலும் தரமான​ வாசிப்பு உடைய​ வாசகராலும் மட்டுமே சாத்தியம்.

படித்தாலும் மனம் பக்குவப்படாத எல்லோரும் வாழ வேண்டும் என்னும் எண்ணமே விதைக்கப்படாமலே போன ஒரு இளைஞர் கூட்டம் இணையங்களில் மேல்ஜாதி ஆதரவுப் பதிவுகளை இடுகின்றார்கள். அவர்களுக்கு அவர்களதுஜாதிப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த பாலபாடம் ஒன்றே ஒன்று தான். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வந்த பின் தான் அரசுப் பணியில் தரம் தாழ்ந்து விட்டது. இது முற்றிலும் நேரெதிரான தகவல். உண்மையில் அரசுப்பணி எப்போதுமே தண்டவாளம் போன்றது. இதற்கான சட்டதிட்டங்கள், நூல் பிசகா ஒழுங்குகள் பிரிட்டிஷ் காலத்தில் முற்றிலும் மேல்ஜாதியினரால் உருவாக்கப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு தலில் மற்றும் ஓபிஸி ஆகியோர் பணிக்கு வரத் துவங்கியது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் முன்பு.

ஆனால் ஊழல், மெத்தனம், மக்களை உதாசீனம் செய்வது எல்லாம் காலகாலமாக இருப்பவை. 1976ல் இந்திராகாந்தியில் ஒடுக்குமுறைக்கும் அவசர நிலைக்கும் ஜால்ரா போட்ட மேல் ஜாதிக்காரர்கள் அரசுப்பணி இனிதான் ஒழுங்காகும் என்றார்கள். 70களில் 90% மேல்ஜாதியே அரசுப்பணியில் இருந்தார்கள்.

நம் நாட்டில் மக்களின் பாதுகாப்பு, சாலையில், உணவில், கலப்படமில்லாப் பொருட்களில் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு 60கள் தொடங்கி இன்றுவரை இல்லை. தரமான சேவை, தரநிர்ணயம் கொண்ட பொருட்கள், பரிமாற்றங்கள், ஒப்பந்தங்கள் இவை எவற்றுக்குமே ஒரு பெரிய வணிக சமூகம் எதிரியாய் இருக்கிறது. பழி தலித்துக்கள் மேல். இட ஒதுக்கீட்டின் மேல். ஊழலை ஒழிக்க தலித் தலித் அல்லாதவர் எல்லோரும் முன்வர வேண்டும். தரமான வாழ்வு வாழும் கனவு எல்லோருக்கும் வேண்டும். அப்போது தானே அவை தலித் ஏனையரால் உறுதி செய்யப் படும்.

அடிப்படையில் ஜாதிவெறி, திமிர், பிறஜாதி மீது வன்மம் இல்லாமல் வாழும் முயற்சியை மானசீகமாக எல்லோருமே தொடங்க வேண்டும். தானே மௌனப் புரட்சி நிகழும்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s