டாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல்


images (1)

images

டாட்டூ – கன்னடத் திரைப்படம்- ஜாதி மதம் தாண்டுதல்

2007ல் வெளியான​ ” டாட்டூ – கன்னடத் திரைப்படம்” தூர்தர்ஷனின் தொலைக்காட்சியில் 23.8.2015 அன்று ஒளிபரப்பானது. சிவருத்ரய்யா என்னும் இயக்குனரின் இந்தப் படம் மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் போலவே ராமாயணத்தின் ஒரு பகுதியை அதாவது “பெண் கடத்தலை” மையமாகக் கொண்டது. எடுத்துக் கொண்ட​ கருவின் கனத் தை இயக்குனரால் கையாள​ முடியவில்லை. இருந்தாலும் சமுதாயம் மாற​ வேண்டும் என்னும் அக்கறை அழுத்தமாக​ வெளிப்பட்டிருப்பதால் இதைப் பற்றி எழுதத் தோன்றுகிறது.

கடத்தியவன் முஸ்லீம். அவன் (திருமணமான​) அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக​ மத​ மாற்றம் செய்ய​ முற்படும் போது ஒரு முஸ்லீம் பெண்ணும் பெரியவரும் அவளைக் காப்பாற்றி அவள் வீடு திரும்பவும் உதவுகிறார்கள். பிராமணப் பெண்ணான​ அவளை ஜாதிப் பிரஷ்டம் செய்யவும் முயற்சி நடக்கிறது. அவள் மேல் குற்றமில்லை என்று ஊர் (பிராமணப்) பெரியவர் ஒருவர் வாதிட​ அவள் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளப் படுகிறாள். ஆனால் தன் குடும்பம் ஊர் வாய்க்கு ஏற்ப​ நிலைப்பாடுகளை விவாதத்தின் போது எடுப்பதை எதிர்த்து அவள் தன் மகனுடன் வீட்டை விட்டே வெளியேறுகிறாள்.

டாட்டூ என்றால் கன்னடத்தில் எல்லை தாண்டுதல் என்று பொருளாம்.
அவளது வீட்டு வேலைகாரனின் மனைவி வேறு ஆளுடன் ஓடிப் போனவள் திரும்ப​ வருகிறாள். அவளை ஏற்கும்படி வாதிடும் ஒரே நபராக​ இருப்பவள் இந்த​ பிராமணப் பெண். இறுதிக் காட்சியில் இந்த​ வேலைக்காரன், அவனது மனைவி, அவளைக் காப்பாற்றிய​ முஸ்லீம் பெரியவர் இவர்கள் எல்லோரும் ஒன்றாக​ எங்கோ போவதாக​ படத்தை முடித்திருப்பது போராட​ வழியில்லை என்னும் பொருளையே கொடுக்கிறது. அவர்கள் எந்தத் திசையில் திரும்பினாலும் இதே கும்பல் தானே வரவேற்கப் போகிறது. இந்தியாவில் எங்கே ஜாதி மதம் தாண்டிய​ இடம் இருக்கிறது?

இந்தப் படத்தின் ஒரு உபகதையாக​ அந்த​ பிராமணக் குடும்பத்தில் ஒரு கிழவருக்கு வாழ்க்கைப் பட்டு அவரது சிதையில் கட்டாயமாக​ உடன்கட்டை ஏற​ வைக்கப் பட்டு பின் தெய்வமாக​ வணங்கப்படும் ஒரு பெண்ணின் கதையை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அது எடுபடவில்லை.

நல்ல பிராமணர் கெட்ட​ பிராமணர் , நல்ல​ முஸ்லீம் கெட்ட​ முஸ்லீம் என​ சமன் செய்யும் முயற்சியும் சமுதாய மாற்றம் அழுத்தமாக​ வலியுறுத்தப் படாமற் போனதன் காரணம்.

எல்லா குறுகிய​ ஜாதி மத​ வெறி நம் எல்லோருக்குள்ளும் விரவிக் கிடக்கிறது. சுய​ விமர்சனம் மற்றும் மாற்றம் தேடும் கனவு நமக்குள் இல்லை.

கோடிக் கணக்கில் செலவு செய்து வரும் அருவாள் மற்றும் காதல் படங்களை ஒப்பிட​ இது அரைவேக்காடானாலும் உருப்படியான​ முயற்சி.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s