சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி”


sample_pic_for_website-4

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி”

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் “புதுமைக் கல்வி” என்னும் திட்டம் ஒன்று துவங்கப் பட்டது என்பதை ‘இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிக்கையிலிருந்து தான் நான் தெரிந்து கொண்டேன். பெரிய விளம்பரம் விழா இல்லாமல் இது துவங்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

“பிரிட்டிஷ் கவுன்சில்” ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஆளுமை, விஞ்ஞானம் மற்றும் ஆங்கில மொழிப்புலமையில் பயிற்சி அளிக்கும் என்று பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது. பிரிட்டிஷ் கவுன்சில் இணைய தளத்தில் நிறைய விவரம் இருக்கிறது. அவர்கள் என்ன மாதிரி இதை நிறவேற்றப் போகிறார்கள் என்னும் விவரம் கீழே:

  • Leadership Development Course For 70 Head Teachers culminating in the development of change management Action Plan
  • Capacity Building Training and Workshops for 30 Teacher Educators
  • Teacher training on English and 21st century skills (blended model, via day-release)
  • Establishing 280 student clubs that support development of 21st century skills, for students of classes 9 – 12
  • Training to student peer leaders on club facilitation and activities
  • Awareness workshops for parents and managing committee members
  • Establishment of teacher clubs at cluster level
  • Continuous Monitoring and Evaluation of Learning for key project stakeholders, leading to an impact study at the end of the three-year pilot

தனியார் சேவை கல்வி மற்றும் வேறு எந்தத் துறையிலும் மக்கள் எதிர்பார்க்கும் அளவு இல்லை. அரசை விட விரைவான முடிவுகள் மற்றும் பதிலளிக்கும் பணியாளர்கள் என்னும் வித்தியாசத்தைத் தவிர அரசுத் துறை சேவையில் உள்ள பல பிரச்சனைகள் அங்கும் உண்டு. மக்கள் ஆதரவும் வருவாயும் அவர்களுக்கு அதிகம் என்பதால் அவ்வப்போது புகார் செய்வோரை மட்டும் குளுமைப்படுத்தி மேற்செல்வார்கள். கல்வித் துறையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடுமையான காலி இடங்கள் மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு மோசமான சம்பளம் மற்றும் இழிவாக நடத்தப்படுதல் இரண்டும் சகஜம். “பிரைவேட் டியூஷன்’ என்னும் தனி வகுப்புகளை நம்பித்தான் பெற்றோர் அங்கே பிள்ளைகளை அனுப்புகிறார்கள். ஏழைப் பிள்ளைகளோடு தன் பிள்ளை பழகும் வாய்ப்பில்லை என்னும் முக்கிய நோக்கம் கண்டிப்பாக நிறைவேறுகிறது.

புதுமைக் கல்வி திட்டம் வெற்றி பெற்றால் அது முக்கியமான மைல் கல்லாக இருக்கும். ஆங்கிலம் தன்னம்பிக்கையின் அடிப்படையாகவே இருக்கிறது நம் சூழலில். அரசுப் பள்ளிப் பிள்ளைகள் இந்த பயிற்சியால் மேலும் தன்னம்பிக்கையும் தனியார் பள்ளிப் பிள்ளைகளுடன் போட்டியிடும் உந்துதலும் பெற்றார்கள் என்றால் அது மிகவும் நல்லது. “உள்ளடக்கிய சமுதாயம்” (inclusive society) என்னும் லட்சியத்தை எட்ட இது நல்ல முன்னகர்வு. சைதை துரைசாமி சென்னை மேயர். சைதைப்பகுதியில் பல சமூகப் பணிகளைச் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அவர் இந்தத் திட்டத்தை வெற்றியாக்கினால் தமிழ்நாடு முழுவதும் இது அமலாக வழி ஏற்படும். பாராட்ட வேண்டிய திட்டம் இது.

(image courtesy: BritishCouncil)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s