ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர் பணி பற்றி புதிய தலைமுறையில் விவாதம்


IMG_20150904_204649223

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர் பணி பற்றி புதிய தலைமுறையில் விவாதம்

4.9.2015 அன்று இரவு மக்கள் மேடை நிகழ்ச்சியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆசிரியர் பணி பற்றிய விவாதம் இடம் பெற்றது மகிழ்ச்சி தந்தது. இன்று ஆசிரியர் பற்றிய எதிர்பார்ப்பும் புகார்களுமாக இரண்டுமே அதிகம். ஆனால் ஆசிரியர் பணி மற்றும் கல்விச் சூழல் குறித்த விவாதங்கள் குறைவே. ஒரு ஊடகத்தின் ஆக்கபூர்வமான பணியாக புதிய தலைமுறை ஒளிபரப்பிய விவாதத்தில் ஆசிரியர் சங்கத் தலைவர் ஒருவர், குழந்தைகள் நல் ஆர்வலர், பெற்றோர், மாணவர் பங்கேற்றனர். மாணவர்கள் ஆசிரியர்கள் நண்பர்களாக, தமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர். பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள முடியாததை ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள இயலும் என்றார் ஒரு மாணவர். ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் ஒரு அம்மையார் இருவருமே ஆசிரியர் பல சவால்களை எதிர்கொண்டே பணியாற்றுகிறார்கள் என்பதை முன் வைத்தார்கள். பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சதவீதம் மிகவும் குறைவு என்பதைப் பலரும் வலியுறுத்தினார்கள். பாடம் நடத்துவதில் நிபுணத்துவம் பெறும் வாசிப்பு மற்றும் அறிவு தாகம் ஆசிரியர்களிடம் இல்லை, ஜாதி உணர்வுடன் செயற்படுகிறார்கள் என்னும் விமர்சனங்களும் வந்தன.

ஜாதி அடிப்படையில் சிந்திப்பது ஆசிரியர்களிடம் மட்டும் எப்படிப் போகும்? அதுவே தமிழ்ச்சூழலின் ஆதாரமாக இருக்கும் போது? ஒரே மாற்று அவர்களை எல்லாத்தரப்புப் பெற்றோரும் கௌரவிக்கும் விழாக்கள், நட்புமுறையான மாணவர், ஆசிரியர், பெற்றோர் கலந்துரையாடல். இவற்றுக்குச் செலவு பிடிக்காது. பெற்றோர் குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட முதலில் உறுதி பூண வேண்டும். பின்னர் ஆசிரியரை மாதம் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்குக் கட்டாயப் பயிற்சி வகுப்புகள் அரசு ஏற்பாடு செய்தால் மாணவரின் கல்வி கற்கும் திறனும் அவர்களது அறிவுத்திறனும் பெரிதும் மேம்படும். ஊக்கத் தொகை மற்றும் பதவி உயர்வுடன் இந்தப் பயிற்சி வகுப்புக்களை இணைத்து விட்டால் நல்ல பலன் இருக்கும்.

ஆசிரியர்கள் தொழில்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தமது பணியின் முக்கியத்துவத்துவத்துக்கு ஏற்ற அளவு உயர வேண்டும். இதை அரசாங்கம் நிச்சயம் உறுதி செய்ய இயலும். ஆசிரியர்களைக் கடவுளாகப் பார்த்த காலம் கற்காலம். மனிதவள உருவாக்கத்தின் வல்லுனராக அவர்களைக் காண வேண்டும்.

ஆசிரிய தினத்தை ஒட்டி புதிய தலைமுறை ஒளிபரப்பிய நிகழ்ச்சி போன்று பல விவாதங்கள் நிகழ வேண்டும். மக்கள் விழிப்புணர்வு ஒன்றே அரசியல்வாதிகளைக் கட்டாயப்படுத்தும்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to ஆசிரியர் தினத்தை ஒட்டி ஆசிரியர் பணி பற்றி புதிய தலைமுறையில் விவாதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s