கண்டாடர் (முள்வேலி)- வங்காள மொழித் திரைப்படம்


220px-Bangla_movie_kata_tar

கண்டாடர் (முள்வேலி)- வங்காள மொழித் திரைப்படம்

2005ல் வெளியான கண்டாடர் என்னும் வங்காள மொழித் திரைப்படம்.
டிடி இந்தியா தொலைக்காட்சியில் 5.9.2015 இரவு 830 மணிக்கு ஒளிபரப்பானது. இந்திய வங்க தேச எல்லையில் அனாதையாக வறுமையில் வாடும் ஒரு இளம் பெண் எந்த அளவு அலைக்கழிக்கப் படுகிறாள் என்பதே கதை. சுதா என்னும் ஒரு பெண் வானிலை இலாகாவின் இரு பணீயாளர்கள் தங்கி இருக்கும் ஒரு கூடாரத்தில் தஞ்சமடைகிறாள். வினோத் அங்கே பணி புரியும் இரு ஊழியர்களில் சீனியர். அவனுடன் அவள் நெருக்கமாகிறாள். அவளது அழகும் அவளது நெருக்கம் தரும் சுகமும் அவளைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்துகிறது. ஒரு நாள் ஒரு வழக்கறிஞர் மூலமாக அவள் பல பெயர்கள் மற்றும் இந்து அல்லது முஸ்லிம் என்னும் இரண்டு அடையாளங்களும் இருப்பவள் என்பதை ஜூனியர் தெரிந்து கொள்கிறான். வினோதை எச்சரிக்கிறான். அவளை வினோத் விசாரிக்கும் போது அவள் தனது கடந்த காலக் கதையை விரிவாகக் கூறுகிறாள். ஒரு ஹிந்து – நிலக்கரி சுரங்கப் பணியில் ஒப்பந்ததாரர் அவனுடன் வாழும் போதும் வறுமையும் எதிர்காலம் பற்றிய கவலையும் அவளைத் தொடர்கின்றன. சலீம் என்னும் ஒரு இளைஞன் தான் தரும் பொருட்களை பத்திரமாக வைத்திருந்து தன்னிடம் திரும்பத் தந்தால் பணம் தருகிறேன் என்று துவங்கி சிறிய பொட்டலங்களில் துவங்கிப் பலவற்றை அவளிடம் கொடுத்து வைக்கிறான். அவ்வப்போது பணமும் தருகிறான். இது அவளுடன் வாழும் ஆளுக்குத் தெரியவர இருவருக்குமான உறவு முறிந்து அவனை விட்டு சலீமிடம் தஞ்சம் புகுகிறாள். தான் ஒரு ஜெயில் பறவை என்று அவன் விளக்கிய பின்பும் அவனுடன் வாழ்கிறாள். அவன் ஒரு முறை கைதானவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுமில்லை. திரும்பவுமில்லை. அங்கிருந்து வந்து வினோதின் கூடாரத்தில் தஞ்சம் புகுந்த அவள் ஒரு ரேஷன் கார்டு, ஒரு விலாசம், இருவேளைச் சோறுடன் ஒரு வாழ்க்கையைத் தேடித் தான் அலைவதாகவும் பல ஆண்கள் தன்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் வாக்குமூலம் போல விளக்குகிறாள். தன் கதையை அவள் சொல்லி முடிக்கும் போது அவளை எல்லைப்புறக் காவல் துறை சோதனையிட அவளிடம் வெளிநாட்டுப் பணம் இருப்பதால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப் படுகிறாள். வானிலை அறிய அவர்கள் பறக்கவிடும் பலூன் ஒரு படிமமாகக் காட்டப் படுகிறது. அது பறக்கும் திசையை வைத்து காற்று அடிக்கும் திசை முடிவாகும். இறுதிக் காட்சியில் அவள் முள்வேலிக்கு அருகில் முஸ்லீம் உடையில் கையில் துணி மூட்டையுடன் நடந்து செல்வது காட்டப் படுகிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் காமிரா. படப்பிடிப்பு மிக அருமையாகச் செய்யப்பட்டிருக்கிறது. மழையில் கூட நல்ல காட்சி கிடைக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலவீனம் முறையான திரைக்கதை என்று எதையும் அமைக்காமல் ஒரு கதாபாத்திரத்தின் மீது இரக்கத்தை வரவழைக்கும் காட்சிகளாகப் படமாக்கி ஒரு தயாரிப்பைக் கொடுத்திருப்பது. எல்லைப்புறத்தின் இரு பக்க மக்கள், ராணுவம், காவல் துறை இவர்களின் பணியில் அனுபவிக்கும் தொல்லைகள் இவற்றையும் சேர்த்திருந்தால் பகைமை தரும் விலையின் வலி காண்போரைச் சென்று சேர்ந்திருக்கும். எல்லைகளைத் தாண்டக்கூடியது பண்பாடு. கிழக்கு மேற்கு ஜெர்மனி இணைந்தது பண்பாட்டின் அடிப்படையில்தான். வறுமை என்பது ஒரு இளம் பெண்ணை மட்டும் பாதிப்பதில்லை. பகை, போர், வறுமை இவை குடும்பங்களை குடும்ப வாழ்க்கையைப் பாதிப்பவை. எதிர்மறையான அவற்றின் தாக்கத்தை ‘கரம் ஹவா’ என்று எழுபதுகளில் வந்த படத்தில் துல்லியமாகக் காட்டியிருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் பஞ்சாபில் ஒரு முஸ்லீம் குடும்பம் சிதறுவது மையமான கதை.

இந்திய வறுமையைப் படம் பிடிக்கும் படங்களுக்கு உலகப் பட விழாக்களில் நல்ல வரவேற்பு. இந்தப் படம் திரையிடப்பட்ட பட்டியல் அதைக் கண்டிப்பாகக் காட்டுகிறது.

BFJA Awards(2007)[5]
Best Actor In Supporting Role- Rudranil Ghosh
Best Actress- Sreelekha Mitra
Best Choreography Rana Dasgupta
Anandalok Awards 2006
Best Actress-Sreelekha Mitra
Fribourg International Film Festival, Switzerland, 2006
São Paulo International Film Festival, Brazil, 2006
Singapore International Film Festival, 2006
Raindance International Film Festival, London, U.K. 2005
Ashdod International Film Festival, Tel Aviv, Israel, 2006
Bangladesh International Film Festival, Dhaka, 2006
Inaugural film, International Forum of new cinema, Kolkata International Film Festival, India, 2005
Inaugural film Chittagong International Film Festival, Bangladesh 2005
Osian Cinefan Festival of Asian Cinema, New Delhi, India 2005
Mumbai International Film Festival, India, 2006
Pune International Film Festival, India, 2005
Habitat International Film Festival, New Delhi, India, 2005
Festival des Cinémas d’Asie, Vesoul, 2007
Silk screen Festival of Asian Cinema, Pittsburg, U.S.A. 2007
Anandaloke Award for Best Actress.
B.F.J.A. Awards for Best Cinematographer, Best Actress and Best Supporting Actor.
Partha Pratim Chowdhury Award for Best Film and Best Director

(Image and award details courtesy: wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s