மாணவர்களின் முதுகுச்சுமை – சமஸ் கட்டுரை


download (1)

மாணவர்களின் முதுகுச்சுமை – சமஸ் கட்டுரை
செப்டம்பர் 4 தமிழ் ஹிந்துவில் “ஆசிரியர்களே எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள் ” என்னும் கட்டுரையில் மாணவர்கள் சுமக்கும் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களின் கனம் பற்றி சமஸ் வேதனைப்படுகிறார். அதன் பகுதி கீழே:

—————————–
“இந்தியாவில் தனியார் பள்ளிகளில் ‘பொதுத்தேர்வுச் சதவெறி’ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுக்கப்பட்டுவிட்ட சூழலில், அரசுப் பள்ளிகளையும் இப்போது மதிப்பெண்கள் துரத்துகின்றன. ஆசிரியர்கள் வெறும் மதிப்பெண் உற்பத்தி இயந்திரங்களாக மாற்றப்படும் சூழலில், அதே இயந்திரமயமாக்கலை மாணவர்களை நோக்கி அவர்கள் திருப்புகிறார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் பிரத்யேகக் கவனம் அளித்துக் கற்பிக்கும் வாய்ப்பு இல்லாத சூழலில் பெருந்திரள் கூட்டத்தை எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் முன்பு இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டிருந்தால், பிரம்பைக் கையில் எடுத்திருப்பார்கள். இப்போது பிரம்பை எடுக்க முடியாத சூழலில், பிள்ளைகளை நோட்டுகளை எடுக்கச் சொல்கிறார்கள். நண்பர்களே, நம்மில் எத்தனை பேர் நம் பிள்ளைகளின் புத்தகப் பைகளை முழுமையாகப் பார்க்கிறோம் என்று தெரியவில்லை. நம்முடைய தலைமுறையினர் கற்பனையே செய்திராத அளவுக்கு இன்றைக்கு நம் பிள்ளைகள் எழுதவைக்கப்படுகிறார்கள். எழுத்து வேலை நம் பிள்ளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சராசரி குழந்தையின் எடையில் 10%-க்கும் மேல் அவர்கள் சுமக்கக் கூடாது; அவர்களுடைய புத்தகப் பைகள் அதற்கு மேல் இருக்கக் கூடாது என்பதற்காகவே கல்வியாளர்கள் தொடர்ந்து பாடப்புத்தகங்கள் சுமையைக் குறைக்க வலியுறுத்துகிறார்கள். அரசாங்கமும் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்கிறது. ஆனால், பெருகிக்கொண்டே போகும் நோட்டுப் புத்தகங்களை யார் தடுப்பது? ஒவ்வொரு குழந்தையின் பையிலும் குறைந்தது 10 – 15 நோட்டுப் புத்தகங்களாவது இருக்கின்றன. எல்லாப் பக்கங்களையும் கூட்டினால், ஆயிரங்களைத் தொடுகிறது. கேட்டால், பள்ளியிலும் எழுத்து வேலை, வீட்டுப்பாடத்திலும் எழுத்து வேலை என்கிறார்கள். எழுத்து வேலை பள்ளியிலும் வீட்டிலுமாக அவர்களை விடுமுறை நாட்களில்கூடத் துரத்திக்கொண்டே இருப்பதால், உடல் பாதிப்புகளைத் தாண்டி பெரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். ”

—————————

முதுகுச்சுமைக்கு நடைமுறைத் தீர்வு ஒன்று இருக்கிறது. எல்லாப் பள்ளிகளும் ஒரு வகுப்பின் எல்லா மாணவருக்கும் தனித்தனியாக அவருடைய பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி அவருக்குப் பாட நேரத்தின் போது கொடுக்க வேண்டும் என்று அரசு சட்டமியற்றலாம். சட்டம் தேவைப்படாது. உத்தரவே போதும். ஆகும் செலவு பள்ளிகள் ஈட்டும் லாபத்தில் .01% தான் இருக்கும்.

இரண்டாவது பத்தியில் சமஸ் மன அழுத்தம் வீட்டுப் பாடவேலை பற்றியெல்லாம் குறிப்பிட்டார். மன அழுத்தம் பெற்றோரால் அதிகப்படுத்தப் படுகிறது. ஒரு வயது ஒன்றரை வயது சிறுவன் என் பக்கத்து வீட்டில் இருக்கிறான். அவன் விளையாடும் நேரம் மிகக் குறைவு. தாய் அவனுக்கு ‘ரைம்ஸ்’ , மண்டே , டுயூஸ் டே,ஒன் டூ த்ரீ எனப் பாடாய் படுத்துகிறார்.

12ம் வகுப்பின் போது கிளி போல மனப்பாடம் செய்து வேலை வளாகத்திலேயே பெற்றுத் தரும் கல்லூரியில் சேர்ந்து ஐடி நிறுவனத்தில் 20000 சம்பளத்துக்குப் போய் கொத்தடிமையாய் உழைக்க வேண்டும் என்று பெற்றோர் பிள்ளைக்காகக் கனவு காணும் வரை இதற்கு முடிவே இல்லை.

மாநிலத்தின் கல்வித்திட்டம் சிபிஎஸ்ஸியை ஒப்பிட மிகவும் சராசரியானது. நுழைவுத் தேர்வும் கிடையாது. பின் என்ன? கிளிப்பிள்ளைகளை உருவாக்க வேண்டியது தான். கட் கட்டுரையின் முடிவில் ஆபிரகாம் லிங்கன் தமது பிள்ளையின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய வரிகளை சமஸ் தருகிறார்.

——————————-
ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன: “ஆசிரியரே, புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதேவேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்!”
————————————-

நாம் கலையுணர்வும், ரசனையும், நுண்ணறிவும் கொண்ட ஆளுமைகளை உருவாக்க விரும்புகிறோமா? சுயசிந்தனையும் தேடலும்  வாழ்க்கைப் போராட்டத்தை எதிர் கொள்ளும் மனவலிமையும் உள்ள இளைஞர்களை உருவாக்க விரும்புகிறோமா? விடையில்லாத கேள்விகள்.

(image courtesy google)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s