கப்ரீசா பவுஸ்- விவசாயிகள் தற்கொலை மையமான மராத்தித் திரைப்படம்


Gabhricha_Paus

சோனாலி குல்கர்னி, கிரிஷ் குல்கர்னி

கப்ரீசா பவுஸ்- விவசாயிகள் தற்கொலை மையமான மராத்தித் திரைப்படம்

“ஏழு ஏக்கர் நிலத்தில் நாலு ஏக்கர் பருத்தி பயிரிடுகிறாய்…”

“ஆம்”

“இதில் எத்தனை குவிண்டால் கிடைக்கும்?”

“எட்டு”

“ஒரு குவிண்டாலுக்கு 2500ரூபாய் கிடைக்குமா?’

“ஆமாம்..”

‘ஏற்கனவே டிராக்டருக்கு 1500, விதைக்கு 5000 , இதைத் தவிர வேலையாட்களுக்குக் கூலி 5000 விளைந்த பருத்தியை சந்தைக்கு எடுத்துப் போக 2000 போக எவ்வளவு மிஞ்சும்?”

“6500”

“அதில் அடுத்த விதை வாங்க 5000 போனால்?”

“1500”

“வெறும் 1500க்கா இந்தப் பாடு படுகிறாய் ?” பக்கத்து நில விவசாயி நக்கலடிக்கிறார். அதைப் பொருட்படுத்தாமல் அவன் தொடர்ந்து விதைக்கிறான். மழையில்லை. தொடர்ந்து மனைவியின் நகைகளை விற்று அவன் மீண்டும் விதை வாங்கி விதைக்கிறான். மழை பெய்கிறது. ஆனால் மிகுதியாகப் பெய்வதால் அவன் எதிர்பார்த்த விளைச்சலில் பாதியே கிடைக்கிறது. அதைக் கந்துவட்டிக்காரன் பழைய பாக்கிக்காக அள்ளிக் கொண்டு போய் விடுகிறான்.

கிஸ்னா என்னும் அந்த விவசாயி தற்கொலை செய்து கொள்ளாமல் தடுக்க அவனது தாயும் மனைவி அல்காவும் போராடுவதே கதை. தொடக்கத்திலேயே ஒரு விவசாயி தற்கொலை என்னும் காட்சி. தோழி ஒருத்தியின் அறிவுரைப்படி கணவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க, பழைய கடனை அடைக்கவில்லை என்று இழிவு செய்யும் மளிகைக் கடைக்காரரிடம் கெஞ்சி சில பொருட்களை வாங்கி பூரண் போளி என்னும் இனிப்பைச் செய்கிறாள். தாயும் அவர்களது 5 மகனும் வெளியே உறங்க தாம்பத்யத்தால் கணவனை மகிழ்ச்சிப்படுத்த முயல்கிறாள். முதலில் விதைத்தவை மழையின்றி வீணாய்ப்போக மறுபடி விதைக்கும் போது மூதாட்டித்தாய் மனைவி இருவரும் ஏர் இழுத்து அவனுக்கு ஆதரவாய் உழைக்கிறார்கள். கந்து வட்டிக்காரன் எல்லாப் பருத்தியையும் அள்ளிக் கொண்டு போனபின் நிலத்தை அடமானம் வைத்து அரசு வங்கியில் கடன் வாங்கி நூறு அடி இரு நூறு அடி தோண்டி 15000 செலவு செய்து நிலத்தடி நீருக்கு வழி செய்கிறான். மின்சாரம் அடிக்கடி தடைப்படுகிறது. உயர் மின் அழுத்தக் கம்பி மீது மின்சாரத்துக்காக ‘ஓயரை” விட்டெறிந்து மின்சாரம் பெற முயலும் போது மின் அதிர்ச்சியில் அவன் மடிகிறான்.

விவசாயிகள் பணம், தண்ணீர், மின்சாரம் என தட்டுப்பாட்டால் எதிர்கொள்ளும் சவால்களும், கடன் மிகுதி விவசாயமும் சாத்தியமில்லை என்னும் நிலையில் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வதும் நம் மனதை உலுக்கும் வண்ணம் படம் வந்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகம். இது பற்றி முன்னர் ஒரு பதிவில் நான் எழுதியதைப் பகிர்கிறேன்.

————————————————————————————–
நம் நாட்டின் பொருளாதாரம் அந்த அளவு மழையை நம்பித்தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் எல்லோருமே விவசாயின் தோழர்களே. ஆனால் விவசாயிகள் நலிவதும் தற்கொலை செய்து கொள்வதும் சகஜம். கூலித் தொழிலாளிகள் பாடு இன்னும் கொடுமையானது.

மழைப் பொழிவு குறையும் போது இந்த அரசியல் பிரச்சனைகள் முன்னுரிமை பெறும்:

1. இரு மாநிலங்கள் இடையிலான நதி நீர்ப் பகிர்வு (இனி ஆந்திரா > தெலுங்கானாவும் வந்து விடும்).
2.விவசாயக் கடன் தள்ளுபடி
3.வறட்சி நிவாரணம்
4.சாகுபடியான (சொற்ப) தானியத்துக்கான விலை
5.விலைவாசி உயர்வு

இப்படி நிறையவே நாம் விவசாயம் சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறோம். ஆனால் விவசாயத்தில் இரண்டு பெரியவர்கள் நிறைய ஆய்வு செய்து வழி காட்டி இருக்கிறார்கள். அன்னா ஹசாரே மற்றும் அமராகி விட்ட ஆழ்வார். அன்னா ஹசாரே தமது பொது வாழ்க்கையை ரானேஜி காவ் சிந்தி என்னும் கிராமத்தில் துவங்கும் போதே அவர் சிறு குளங்களில் நீரை சேமிக்கும் வழியை மக்களுக்கு அறிமுகம் செய்தார். இவை நிலத்தடி நீரின் அளவை உயர்த்தின. பஞ்ச காலத்தில் மிகவும் உதவின. ஆழ்வாரும் குறைந்த அளவு நீரில் பாசனம் செய்ய நிறையவே சொல்லிக் கொடுத்தவர்.

பெரிய நதிகளை இணைப்பது பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். அது அபாயகரமானது என்னும் எதிர்க்கருத்தும் உண்டு. நதியின் போக்கை மாற்றக் கூடாது என்பதே அதன் மையக் கருத்து. சிறிய நதிகளை அவற்றின் போக்கை மாற்றாமல் இணைக்கலாம். பெரிய அணைகள் பல கிராமங்களை விழுங்கியே உருவாகும் மேலும் நிலத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றும் பல பதிவுகள் உள்ளன. சிறிய குளங்கள் சரியான மாற்று மட்டுமல்ல ஒரு கிராமம் தன்னிறைவு பெறுவதற்கு மிகவும் உதவும்.

நான் மேலே குறிப்பிட்டவை அனேகமாக நிறைய பேருக்குத் தெரியும். மரங்களை / காடுகளை அழிப்பது மழையை மிகவும் பாதிக்கிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நாம் சென்னை தொடங்கிப் பல நகரங்களில் குட்டைகள் ஏரிகளை அழித்துப் பல குடியிருப்புகளை நிறுவி விட்டோம்.

மறுபக்கம் விவசாயம் முடியாத போது மாற்றுத் தொழில்களை மேற்கொண்டு உற்பத்தி செய்தவற்றை விற்க எந்த ஏற்பாடுமில்லாமல் கிராமங்களை எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டோம்.

பருவ மழை தவறியது என்று சொல்லும் போதே நான் தவறியவற்றை விட்டுவிடுங்கள் என்று பேச்சை மாற்றுகிறோம். அதுவே கசப்பான உண்மை.
———————————————————————————————————————-

இந்தப் படம் பெற்ற விருது/ திரையிடல் விவரங்கள்:
Best Marathi Film – Pune International Film Festival, India (2009)
Special Jury Award – Maharashtra State Film Awards, India (2009)
Best Editing Award – Ahmadabad International Film Festival, India (2009)
Awarded – Hubert Bals Fund for Distribution
Official Selection – Festival International du film de Rotterdam, Netherlands
Official Selection – Transylvania International Film Festival, Romania
Official Selection – Durban International Film festival, South Africa
Official Selection – Indian Film Festival of Los Angeles (IFFLA), LA
Official Selection – Vancouver International film festival, Canada
Official Selection – Warsaw International film festival, Poland
Official Selection – Bollywood and Beyond, Stuttgart, Germany
Official Selection – Habitat Film Festival, New Delhi, India
Official Selection – Goa Marathi Film festival, India
Official Selection – Kolhapur International Film Festival, India
First Prize – BMM Convention Film Festival, Philadelphia, USA

(image/ award details courtesy: wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s