கோ யாட் மிஸ்லின் மொழி (அஸ்ஸாம்) திரைப்படம்


download

கோ யாட் மிஸ்லின் மொழி (அஸ்ஸாம்) திரைப்படம்
மஞ்சு போராவால் இயக்கப்பட்ட இந்தப் படம் 2012ல் வெளியானது. அமைதியான வழி என்று தமிழில் தலைப்புக்குப் பொருள்.

பௌகாம் பள்ளிப்படிப்பை விட்டவர். அவரிடம் இருப்பதெல்லாம் அவர் அப்பா அவருக்குத் தந்து சென்ற பெரிய படகும் இரு நதிகளுமே அவரின் சொத்து. நதியில் மிதந்து வரும் மரத் துண்டுகள் கரையோரம் இருக்கும் கட்டைகள் இவற்றைச் சேகரித்து அவற்றை உணவு விடுதிகளுக்கு விற்பது மட்டுமே அவருக்குத் தெரியும். அபாங்க் என்னும் கள் போன்ற ஒரு பானத்தை அருந்துவார். கடுமையான உழைப்பாளி. கடும் மழையில் நள்ளிரவில் அவர் ஒரு நாள் வீட்டில் இருக்க மாட்டார். அப்போது அவர் திரும்பி வந்ததும் கவலையுடன் அவரை வினவும் மனைவியிடம் “கடும் காற்றும் மழையும் என் படகு இருக்கிறதா என்று பார்த்தேன்” என்பார். அவருக்கு மூன்று குழந்தைகள் மூத்தவன் ஆண் அடுத்தது பெண் அடுத்தது ஆண். மூத்த மகன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து திப்ரூகரில் படிப்பைத் துவங்குகிறான். அவனுக்குத் தேவையான பணத்தை அப்பாவால் அனுப்ப முடியவில்லை. இரவு பகல் உழைத்தும் முடியவில்லை. இதனால் இரண்டாம் மகன் படிப்பை நிறுத்தி அவனை மாடு மேய்க்க அனுப்புகிறார். திப்ரூகரில் ஒரு நீதிபதி குடும்பம் முதல் மகனைத் தமது மகளுக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். திருமணத்துக்கு தன் குடும்பத்தில் யாரையும் அழைக்காத அவன் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று விடுகிறான். இரண்டாம் மகன் தன் அண்ணனுக்காகத் தன் கையில் எப்போதும் சாணி நாற்றமெடுக்க உழைத்ததே மிச்சம் என்று தந்தை மீது கோபம் கொள்கிறான். தன் திருமணத்துக்குப் பின் அவன் பஞ்சாயத்து வைத்து வீட்டில் பங்கு கேட்கிறான். அது சரி என்று பஞ்சாயத்து முடிவெடுக்க மரத்துண்டுகளும் மூங்கிலுமான அந்த வீடு கைகளாலேயே பிரிக்கப் பட்டு அவன் பங்கு அவனுக்கு வழங்கப்படுகிறது. மகள் ஒருவனுடன் (திருமணத்துக்காக) ஓடி விடுகிறாள். “இந்தப் படகும் நதியும் என்னை என்றுமே கைவிடாது என் கிறார் பௌகாம். ஒரு நாள் படகு நதியில் போய்விடுகிறது. அதை அவரால் ஏற்கவே முடியவில்லை. குழந்தைகள் கைவிட்டதை அவரால் தாங்க முடிந்தது. நதி ஏமாற்றியது பொறுக்க முடியாமல் கதறிக் கதறி அழுகிறார். மனதைத் தொடும் கதை.

நடிகர்கள் நடித்தபடம் போல இது இல்லை. படகில் மரக்கட்டைகளை ஏற்றும் லாகவம் நம்மை வியக்க வைக்கிறது. நதிக்குள் மாடுகளை நடத்தி அழைத்துச் செல்லும் போது கழுத்தளவு நீர். நடித்தவர்கள் அஸ்ஸாமிய கிராமப்புறத்தவர். மழையிலும் ஒளிப்பது மிகவும் துல்லியம்.

வணிக ரீதியாக எதுவுமே இல்லாமல் அதிகம் அறியப்படாத மொழியில் வந்திருக்கும் நல்ல பாத்திரப்படைப்புடைய படம். அஸ்ஸாமிய வாழ்க்கைமுறையை அறிகிறோம். உயரமான மரத்தாங்கிகள் மீது மூங்கில் தட்டிகள் மரத்துண்டுகளாலான வீடு. தரையும் மரத்தில் தான். 12.9.2015 அன்று டிடி இந்தியா தொலைகாட்சியில் மாலையில் ஒளிபரப்பானது.

படம் பெற்ற விருது விவரங்கள்:Display and honors[edit]
Best director’s award, Ladakh International Film Festival.[10][11]
Good film honor, The Indian Films Competition Jury. Best film award, Bengaluru International Film Festival, December 2 to December 26, 2013.[12][13]
Shown on15th Mumbai Film Festival[7][14][15]
Best Mising Film, 60th National Film Awards, 2012 [16][17][18]
Best Cinematography Award, 60th National Film Awards.[4]

(imagecourtesy;youtube)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s