எவரெஸ்ட் திரைப்படம்- சாகச முயற்சியில் உயிர் நீத்தவர்கள் கதை


Everest_poster

எவரெஸ்ட் திரைப்படம்- சாகச முயற்சியில் உயிர் நீத்தவர்கள் கதை

1996ல் எவரெஸ்ட் உச்சியை எட்ட முயன்றோரில் 12 பேர் மொத்தம் உயிர் நீத்தனர். அவர்களில் 8 பேர் புயலில் சிக்கி உயிர் நீத்தவர்கள். அந்த சோகத்தின் திரைப்பட வடிவம் எவரெஸ்ட். 3டி தொழில் நுட்பத்தில் பல காட்சிகள் அங்குள்ள உறைபனிச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன. 1953ல் டென்சிங் ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினர். அதற்குப் பின் 70களில் வணிக ரீதியாக மலையேறும் சாகசம் செய்பவர்களுக்கு வழிகாட்டுவது துவங்கியது. நியூஸீலாந்த் நிறுவனம் ஏற்பாடு செய்யும் மலையேறும் திட்டத்தில் தென் ஆப்பிரிக்கர்கள் மற்றும் அமெரிக்கர்கள் என இரு குழுக்கள். முதல் பாதியில் அவர்கள் மலை ஏறுவது ஆவணப் படம் போன்றே காட்டப்படுகிறது. கடும் குளிரில் 9000 அடியில் முதல் அடிவாரக் கூடாரம், பிறகு 12000 பிறகு 17000 அடி வரை தொடர்கிறது. மூன்றாவது கூடாரத்தில் அவர்களுக்கு மருத்துவ மற்றும் தொலைதொடர்பு உதவி உண்டு. அதற்குப் பிறகு இல்லை. அவர்களே சிறிய சிறிய கூடாரங்களை அமைத்துத் தங்குகிறார்கள். அவ்வளவே. மலையேறுவோரில் பல்வேறு வயதினர். 60 அதைக்கடந்தவர்கள் பெண்கள் உற்சாகமாகப் பங்கேற்கிறார்கள். பால்கனி என 20000 அடி உயரத்தில் மலையின் ஒரு பகுதி வருகிறது. அதுவரை ஷெர்பா என்னும் மலை இனத்தவர்கள் கயிறு கட்டி ஏற உதவுகிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உதவி இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் குளிர் ஆடைகள் மற்றும் உணவு, தண்ணீர் இவற்றைப் பெரிய பொதியாகச் சுமந்து செல்கிறார்கள். ஒருவர் திடீரெனப் பார்வையை இழக்கிறார். ஆனால் தொடர்ந்து மேலே ஏறுகிறார். இறுதி 500 அடி தூரம் ஏறும் போது அவர்கள் அது வரைத் தாமே கயிறுப் பாதை அமைத்து வந்தவர்கள் அது இல்லாமேலேயே கூர்மையான நடைக்குச்சி போன்ற ஒன்றைப் பயன் படுத்தி ஏறி விடுகிறார்கள். ஆனால் இறங்கும் போது பனிச்சரிவிலும் புயலிலும் சிக்கி ஒவ்வொருவராகப் பலரும் இறந்து விடுகிறார்கள்.

வெகு நாட்கள் முன் நான் டெல்லியிலிருந்து ரயில் பயணத்தில் ராணுவவீரர்களுடன் உரையாடும் போது அவர்கள் கார்கில், டிராஸ் மற்றும் சியாசன் போன்ற பனி உறையும் இடங்களில் சற்று கவனம் பிசகிக் கைவிரல், கால் விரல்களைப் பாதுகாக்காவிட்டால் அவை நீக்குமளவு உறைந்து விடும். பிறகு அவை இல்லாமலேயே வாழ வேண்டும் என்று எனக்கு விளக்கிக் கூறிய போது கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்தப் படம் அந்த உறைபனிச் சூழலை நம் கண்முன் காட்டுகிறது.

சாகச விளையாட்டு என்பது சிலரை மிகவும் ஈர்க்கும். நாம் அதிகம் அறியாத எவரெஸ்ட் மலையின் அதி உயர இடங்கள் அங்குள்ள நிலையில்லாத் தட்பவெப்பம் மற்றும் மனிதன் எதிர்கொள்ளும் சவால்களைத் தெரிந்து கொள்கிறோம். எப்படி இவ்வளவு உயரத்தில் மனிதர்கள் எறும்பு போல் மலையேறுவதைப் படமாக்கி இருப்பார்கள் என்று கேட்டேன். டிரோன் என்னும் மிகச் சிறிய தானியங்கி விமானத்தில் படம் பிடித்திருப்பார்கள் என விளக்கினான். படப்பிடிப்பு மிகவும் துல்லியமானது. இயக்குனர் Baltasar Kormákur பாராட்டுக்குரியவர்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s