கூர்மாவதார்- கன்னடத் திரைப்படம்- காந்தியாக நடிப்பதும் வாழ்வதும்


images

கூர்மாவதார்- கன்னடத் திரைப்படம்- காந்தியாக நடிப்பதும் வாழ்வதும்

கிரிஷ் கசராவல்லி இயக்கிய “கூர்மாவதார்” என்னும் கன்னடத் திரைப்படம் 2012ல் வெளியாகி அந்த வருடத்திய சிறந்த கன்னடப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. வீரபத்ரா என்பவரின் சிறுகதையின் திரைப்பட வடிவம். இது. ராவ் என்னும் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர். நேர்மையானவர். அவரை காந்தியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடரில் காந்தியாக நடிக்கச் சொல்கிறார்கள். மிகுந்த தயக்கத்துக்குப்பின் ஒப்புக் கொள்கிறார். அவரது பரிந்துரையின் படி அவரது நண்பர் இஸ்லாமியர் ஒருவரின் மகனுக்கு கோட்ஸே கதா பாத்திரம் கிடைக்கிறது. காந்தியின் வாழ்க்கையை அவரது கொள்கைகளை ஒப்பிடத் தம் நிலை அவருக்கு மிகவும் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மனைவியை இழந்த அவரது மகன் சரியானவர்களுடன் நட்பில் இல்லை சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கை உள்ளவர்களிடம் அவனுக்குத் தொடர்பு இருக்கிறது என்பது அவரது ஐயம். அவன் தன் கூட்டாளிகளுக்கு 50000 திருப்பித் தர வேண்டும். மகன் அந்தப் பணத்தைத் தரச் சொல்லி வலியுறுத்துகிறான். ஆனால் தவறானவர்கள் கையில் அது போகும் என்று அவர் தர மறுக்க அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனை சமாதானம் செய்யச் சென்றவரை உதாசீனம் செய்து மருமகள் வெளியே அனுப்பி விடுகிறாள். கூட்டாளி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவன் கைதாகிறான். அவனை விடுவிக்க 10000 லஞ்சமும் கூட்டாளிக்கான 50000 தர வேண்டும். லஞ்சம் தர இவர் மனம் ஒப்பவில்லை. வேறு வழியின்றித்தருகிறார். மறுபக்கம் கோட்ஸேயாக ஒரு முஸ்லீம் நடிக்கக்கூடாது என ஒரு இந்து அமைப்பு மிரட்டல் விடுக்கவே அந்த முஸ்லீம் இளைஞன் நீக்கப் பட்டு ஒரு இந்து நடிக்க வருகிறான். அவன் புகழ் பெற்ற சின்னத் திரை மற்றும் சினிமா நடிகன். லஞ்சம் மற்றும் மதவாதம் தரும் மன அழுத்தத்தில் அவரால் காந்தி சுடப்படும் இறுதிக் காட்சியில் சாந்தமும் கருணையும் கொண்ட முகத்தோடு வர இயலவில்லை. பல “டேக்” எடுத்தும் அந்தக் காட்சி முடியாமற் போகும் போது புது நடிகனாக வந்தவன் இவரைச் சாட “எப்படியாகவது முடித்துக் கொடுத்துவிடுகிறேன். காந்தி பாத்திரத்தில் நடிக்கும் தார்மீக பலத்தை நான் இழந்து விட்டேன்” என்று கண்ணீர் மல்கக் கூறுவதுடன் படம் நிறைவடைகிறது.

அமுதத்தை எடுப்பதற்காக தேவர் அசுரர் இருவரும் பாற்கடலைக் கடைந்தது மந்தர மலையை மத்தாகப் பயன்படுத்த .அது பாற்கடலில் மூழ்க ஆரம்பித்த போது கூர்ம (ஆமை) வடிவில் விஷ்ணு அவதாரம் எடுத்து மலையைத் தாங்கிக் கொள்கிறார். இது இந்தக் கதையில் பொருந்தவே இல்லை. கதையில் குழந்தை விளையாடக் குட்டி ஆமை ஒன்று வீட்டில் இருப்பதாகவும் பின்பு தந்தை மகன் பிணக்கில் அதை அப்பாவிடமே கொடுத்து விடுவது போலவும் ஒரு காட்சி வருகிறது. பொதுவாகத் தென்னிந்திய நம்பிக்கைப் படி வீட்டில் யாரும் ஆமையை வைத்துக் கொள்ளவே மாட்டார்கள். ஒரு படிமமாக அந்த ஆமை திரைப்படத்தில் ஒட்டவில்லை.

சரி இந்தப் படத்தில் நம்மைக் கவர்வது? டாக்டர் ஷிகாரிபுரா கிருஷ்ணமூர்த்தி என்னும் காந்தியாக நடித்தவர் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அவர் உருவத்தில் அக்சு அசல் காந்தியைப் போலவே இருக்கிறார். வணிகப் படங்கள் நடுவே இது போன்ற படங்கள் உருப்படியான முயற்சி. காந்தியடிகள் பற்றிய புரிதல் உலக அளவில் உள்ள அளவு இந்தியாவில் இல்லை. அந்த அடிப்படையிலும் நல்ல முயற்சி. டிடி இந்தியாவில் 20.9.2015 பகலில் ஒளிபரப்பானது.

(image courtesy:rediff.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சினிமா விமர்சனம். and tagged , . Bookmark the permalink.

One Response to கூர்மாவதார்- கன்னடத் திரைப்படம்- காந்தியாக நடிப்பதும் வாழ்வதும்

  1. yarlpavanan says:

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    எனது புதிய தளம்
    http://www.ypvnpubs.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s