நூலிழை
சத்யானந்தன்
நான் எங்கேயாவது
நினைத்த போதே
கிளம்பி விடுவேன்
என்பது
அம்மாவுக்குப் பழக்கமானது
உணவு பரிமாறும் போது
அம்மா சொன்னது
பயணத்தின் போது
முழுவடிவாகி பக்கத்தில்
அமர்கின்றன
எந்தத் திசையில் பயணித்தாலும்
அது இறந்த காலத்தை விட்டு
மேலும் விலகவே செய்விக்கிறது
ஆனால்
அம்மாவுக்கு இறந்த காலத்தில்
இருந்து புது பட்டு நூலிழையை
உருவுவது
எளிதாய் சாத்தியமாகிறது
புதிய ஆடையை நெய்ய
இயலாதென்றாலும்
அம்மா அதை
ஆர்வமாகவே செய்கிறாள்
நீ அவளைத்
திருமணம் செய்யாததற்காக
வருந்தினாயா அப்பா?
என் மகளின் மின்னஞ்சலில்
அதே லாகவத்துடன் உருவிய
மற்றொரு
நூலிழை
(27.9.2015 திண்ணை இதழில் வெளியானது)
(image courtesy:shtterstock.com)
அருமை