டி பத்மநாபனின் மலையாளச் சிறுகதை- சாயங்கால வெளிச்சம்
இனிய உதயம் செப்டம்பர் 2015 இதழில் “சாயங்கால வெளிச்சம்” என்னும் டி.பத்மநாபனின் மலையாள சிறுகதையின் மொழிபெயர்ப்பு வாசிக்கக் கிடைத்தது.
தான் மிகுந்த ஈடுபாடு காண்பித்த இயக்கம் காரணமாக அப்பாவால் குடும்பத்தை விட்டு வெளியேற்றப் படுகிறான் ஒரு இளைஞன். அவனது தனிமை சமூக ரீதியாக அவனை மிகவும் வாட்டுகிறது. அவன் ஈடுபட்டிருக்கும் இயக்கம் தொடர்பாக அவனுக்குக் கடிதங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அவன் தங்குவது தனியாகத் தான். வறிய குடும்பத் துச் சிறுவன் ஒருவன் சில மாதங்கள் அவனுக்கு உதவியாக இருக்கிறான். பிறகு அவன் தன் குடும்பத்துக்கே திரும்பச் சென்று விடுகிறான். தாயின் உடல் நலம் பற்றிக் கூட இவன் தன் அண்ணன் மூலமாகவே தெரிந்து கொள்கிறான். தனிமையின் உக்கிரம் மிகுந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவே கதை.
அனேகமாகத் தனிமை என்பது முதலில் மனதளவில் தான் துவங்குகிறது. பிறகு அது சூழ்நிலையால் சற்றே தணிகிறது. அல்லது அதிகரிக்கிறது. கொள்கை மற்றும் இயக்கம் குடும்பத்துக்கு வெளியே எப்போதுமே நின்று விடாது. தீவிரத்தைப் பொருத்து அது குடும்பத் தின் மீது ஒரு தாக்கத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். இயக்கம் என்னும் அமைப்பு குடும்பம் என்னும் மற்றொரு அமைப்பை பாதிக்கும். குடும்பத் துக்குள் இயக்கமோ அல்லது இயக்கம் மீது குடும்பமோ ஒன்ற வழியில் லை. இது ஒருவனது அறிவுசார் ஆளுமைக்கும் உணர்வுசார் ஆளுமைக்கும் இடைப்பட்ட போராட்டமாக அவனுக்குள் ஒரு வெறுமையை ஏற்படுத் துகிறது. இது கதையில் அழுத்தமாக வெளிப்படுகிறது.