புதுமைப் பித்தனின் போராட்டமான வாழ்க்கை – எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை


download

‘கண்மணி கமலாவுக்கு’ என்ற புதுமை பித்தனின் கடிதங்களை இளையபாரதி நூலாகத் தொகுத் திருக்கிறார். அந்த​ நூலின் அடிப்படையில் புதுமைப்பித் தன் வறுமையுடன் போராடியதை எஸ்.ராமகிருஷ்ணன் “வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!” என்னும் கட்டுரையில் தமிழ் ஹிந்து 1.10.2015 இதழில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான​ இணைப்பு ——–> இது

அவரது இறுதி நாட்களைப் பற்றியும் அவரது இலக்கியம் பற்றியும் நான் ஏற்கனவே செய்த​ பதிவைக் கீழே பகிர்கிறேன்:

புதுமைப் பித்தனின் போராட்டமான வாழ்க்கை

இனிய உதயம் பிப்ரவரி 2015 இதழில் வே.முத்துக்குமார் புதுமைப்பித்தன் காலமெல்லாம் பணத்துக்குக் கஷ்டப் பட்டவராகவும் போராடி இளவயதில் மறைந்ததையும் பற்றி விரிவான கட்டுரை எழுதி இருக்கிறார். ‘புதுமைப் பித்தன்- காலத்தின் குரலுக்குச் செவி சாய்த்த கலைஞன் கட்டுரை வ.ரா. புதுமைப்பித்தனை ஊழியன் என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராக்குவதில் தொடங்கி, பின்னர் அவர் தினமணி, தினசரி ஆகிய பத்திரிக்கைகளி பணிபுரிந்து விலகிய காலத்தை விரிவாகச் சொல்கிறது. 1946க்குப் பிறகு ஜெமினி நிறுவனத்தின் ‘அவ்வை’ படத்துக்கு அவர் வசனம் எழுதுகிறார். நல்ல வருமானம் வரும் அளவு பிற சினிமா நிறுவனங்களிலும் அவர் வசனம் எழுதும் போது தான் அவருக்குப் பணக் கஷ்டத்தில் இருந்து சற்றே விடுதலை கிடைக்கிறது. அவர் குற்றாலக் குறவஞ்சியை அடிப்படையாகக் கொண்டு ‘வசந்தவல்லி’ என்னும் படத்தைத் தயாரிக்கத் துவங்குகிறார். பல சிக்கல்களில் மாட்டி அந்தப் படம் நின்று போய் விடுகிறது. பிறகு தியாகராஜ பாகவதர் படத்தின் வசனத்தை எழுதுவதற்காக புனை வரும் அவர் அங்கே காச நோய் பாதிப்புக்கு ஆளாகிறார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை எடுக்கும் அவர் தம் குடும்பத்தாரை ஏன் தம்மைப் பார்த்துக் கொள்ளும் படி அழைக்கவில்லை என்பது தெரியவில்லை. எஸ்.சிதம்பரம் என்னும் தன் வாசகரின் அரவணைப்பிலேயே அவரது இறுதி நாட்கள் கழிகின்றன.

நவீன கவிதைக்கு பாரதியார் தந்த வடிவம் அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது. சிறுகதையில் நவீனத்துவத்தை புதுமைப்பித்தனே தமிழுக்கு அறிமுகம் செய்தார். நவீனத்துவம் செவ்விலக்கியத்தில் இல்லாத மீறல்களைக் கொண்டது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ‘சாபவிமோசனம்’ என்னும் சிறுகதை அவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது என்று நாம் கருதலாம். ராமனும் சீதையும் மணமுடிக்கும் முன்பே வனவாசம் புகும் முன்பே அகலிகைக்கு சாபவிமோசனம் கிடைத்து விடுகிறது. கௌதமரிடம் மன மாற்றம் இருக்கிறது. மனமறிந்து குற்றம் புரியாத அகலிகை குற்றமற்றவள் – சினத்தால் சாபமிட்ட தானே குற்றவாளி என்னுமளவு அவருள் தெளிவு பிறக்கிறது. பிர ரிஷி பத்தினிகளின் இளப்பப் பார்வையும் ஏளனமும் அகலிகையை மனமுடையச் செய்கின்றன. வனவாசம் முடிந்து வரும் சீதையைச் சந்திக்கிறாள். அவளை அக்கினிப்பிரவேசத்தின் மூலம் ஊருக்குத் தன் கற்பை நிரூபிக்கச் சொன்னார் ராமன் என்று தெரிந்ததும் மீண்டும் கல்லாகி விடுகிறாள். மற்றொரு சந்ததி சதானந்தனைத் தவிர வேண்டும் என்று அவளை அணுகும் கௌதமர் கைக்கு அவளது கற்சிலையே கிடைக்கிறது.

ராமாயணத்தின் முக்கியப் பெண் கதாபாத்திரங்களான சீதை அகலிகை இருவரையும் வைத்துக் கற்பனையான சிறுகதை எழுதி பெண்களின் இழி நிலையைப் புனைகதை மூலமே தெளிவு படுத்தினார். இந்தக் கலைத் தன்மையே பிரசார நெடி இல்லாத படைப்பாகவும் அதே சமயம் சமுதாயத்தின் சிந்தனையில் மாற்றம் கோரும் படைப்பாகவும் இந்தப் படைப்பை உயர்த்துகிறது. புதுமைப்பித்தன் காலத்தில் இத்தகைய படைப்பு சக படைப்பாளிகளை விட கலையில் நவீனத்துவத்துவத்தில் சிறந்து நிற்பது.

நவீன இலக்கியத்தைப் புதுமைப்பித்தனுக்கு முந்தைய காலம் பிந்தையது என்றே பிரிக்க வேண்டும். அவரே இன்றைய எழுத்தாளர்கள் அனைவரின் முன்னோடி.

(image courtesy:play.google.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s