ஒரே கடல்- மலையாளத் திரைப்படம்
ஒரு நாவலைத் திரைப்படமாக்கும் போது பாத்திரங்களைக் கட்டமைப்பது இயக்குனருக்குத் துல்லியமாக சாத்தியமாகிறது. மிகவும் சிக்கலான ஆண் பெண் உறவு பற்றிய இந்தக் கதையில் நடிக்க நட்சத்திர அந்தஸ்து உள்ள மம்மூட்டி முன்வந்தது மலையாளத்தில் நடிகர்கள் நடிக்கும் வாய்ப்புள்ள கதாபாத்திரங்களைக் கைநழுவ விடுவதில்லை என்று தெளிவாக்குகிறது.
உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் திருமணமே செய்து கொள்ளாதவன். (நாதன்) நடுவயது கடந்த அவனுக்குப் பெண்கள் உடல் தேவை பொருட்டு மட்டுமே தற்காலிகமாய்த் துணையாவார்கள். அவர்கள் மீது தனக்கு எந்த விதமான உணர்வு பூர்வமான பிடிப்பும் கிடையாது என அவன் கூறிக் கொள்வான். அவனுக்கு அறிவு பூர்வமான ஒரு தோழி உண்டு. ஆனால் அவள் அவனது மனதுக்கு உணர்வு பூர்வமான ஆதரவு தர இயலாதவளாகிறாள். அதற்கு அவனே காரணம். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மற்றொரு தளத்தில் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் கணவன் வேலைக்குப் போகாததால் கடும் வறுமை. அவனுக்கு வேலை கிடைக்க நாதன் உதவுகிறான். அந்தக் குடும்பத்தின் இளம் மனைவியிடம் அவன் வெளிப்படையாகவே உடல் தேவையைப் பூர்த்தி செய்யும் படி கேட்கிறான். குடும்ப வறுமையால் அவள் இணங்கி விடுகிறாள். தன் கணவன் மூலம் மகன் இருக்கும் அவளுக்கு நாதன் மூலம் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குற்ற உணர்வில் அவள் மனச் சமநிலை பிறழ்கிறாள். இரண்டு வருடம் சிகிச்சைக்குப் பிறகு அவள் மனநல விடுதியில் இருந்து திரும்பி வருகிறாள். இந்தக் காலகட்டத்தில் முதல் முறையாக நாதன் அவள் மீது தனக்கு இருக்கும் உணர்வு பூர்வமான பந்தத்தை உணர்கிறான். விவரம் எதுவும் தெரியாத அவளது கணவன் தன் வீட்டுக்கு வரும்படி அழைக்கிறான். ஆனால் நாதன் அந்தக் குடும்பத்தை விட்டுத் தள்ளி இருக்க எண்ணி அங்கே போகவில்லை. நாதனை நோக்கி ஈர்க்கப்படும் அவள் இறைவழிபாட்டாலும் அதை நீக்க முடியாதவளாய் நாதன் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள். இருவரும் இணைபிரியாது இருக்க முடிவெடுக்கும் போது அவள் பின்னே வந்த குழந்தைகளையும் அவன் அணைத்துக்கொள்ளும் போது திரைப்படம் முடிவடைகிறது. டிடி பாரதியில் 3.10.2015 அன்று இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பான இந்தப் படத்தின் இயக்குனர் ஷியாம் பிரசாத். மூலக்கதை சுனில் கங்கோபாத்யாயா எழுதிய ஹிரக் தீப்தி என்னும் நாவல். மீரா ஜாஸ்மின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. இந்தப் படத்தின் கதை அசோகமித்திரனின் மானஸரோவர் நாவலின் முக்கியமான பகுதியை நினைவு படுத்துகிறது. சமூக அரண்கள் மீறல்கள் இலக்கிய வடிவில் உருப்பெறும் போது நாம் சுயவிமர்சனமும் நம்மைப் பற்றிய மேம்பட்ட புரிதல்களையும் அடைய வழி செய்கின்றன.
இந்தப் படம் பெற்ற விருதுகள் / திரையிடல்கள்
IFFI Indian Panorama, 2007
Asiatic – Rome, 2008
Fribourg International Film Festival, Switzerland, 2008
Indian Film Festival of Los Angeles, 2008
International Film Festival of Minneapolis, 2008
Cine Del Sur, Granada, Spain, 2008
Stuttgart Festival of Bollywood and Beyond, July 2008
Festival of Malayalam Films, Vollodoid, Spain, June 2008
International Film Festival of Kerala, 2007
Hyderabad International Film Fest
Pune International Film Festival
MAMI Festival, Mumbai
Habitat Film Festival, New Delhi
Asian Film Festival, Abudhabi
Awards[edit]
National Film Awards
Best Regional Film
Best Music Direction – Ouseppachan
Kerala State Awards 2007
Second Best Film – Ore Kadal
Best Actress – Meera Jasmine
Best Background Score – Ouseppachan
Best Editor – Vinod Sukumaran
Dubai Amma Awards 2007
Best Movie – Ore Kadal
Best Actor – Mammootty
Best Actress – Meera Jasmine
Best Supporting Actress – Ramya Krishnan
Best Camera Man – Azhakappan
Best Music Director – Ouseppachan
IFFK 2007 Awards
NETPAC Award for the Best Malayalam Film
Fipresci Award for the Best Malayalam Film
Asianet Film Award 2007
Best Actor award – Mammootty
Best Actress award – Meera Jasmine
Film Critics Award 2007
Best Movie
Best Director
Best Female Singer
Best Camera man
Best Sound Recorder
Vanitha Film Award 2007
Best Actor- Mammootty
Best Actress – Meera Jasmine
FOKANA Film Award 2007
Best Actor – Mammootty
Best Actress – Meera Jasmine
Sify Award 2007
Best Movie – Ore Kadal
Best Actor – Mammootty
Best Actress – Meera Jasmine
Amrita Film Awards 2007
Best Director – Shyamaprasad
Best Actor – Mammootty
Best Actress – Meera Jasmine
Best Supporting Actress – Ramya Krishnan
Best Music Director – Ouseppachan
Best Female Singer – Shweta Mohan
Others
John Abraham Award for Ore Kadal
V.Santharam National Award for the Best Actress – Meera Jasmine
First Sreevidya Award for Best Actress – Meera Jasmine
Bollywood & Beyond 2008 (Stuttgart, Germany): Audience Best Film Award for Ore Kadal
(iamge courtesy & award details courtesy: wiki)