காலன்பக் – காந்தியடிகளுக்கு லுதுவேனியாவில் சிலை
காந்தியடிகளின் ஆசிரம வாழ்க்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவில் அவர் நிகழ்த்திய உரிமைப் போராட்டங்கள் இவற்றால் ஈர்க்கப் பட்டு அவரோடு இணைந்த வெள் ளையரே காலன்பக், ஆசிரமத் துக்கும் மற்றும் இந்தியருக்கும் பல நூறு ஏக்கர் நிலங்களை வழங்கியவரும் மற்றும் காந்தியடிகளோடு நெருங்கிப் பழகியவரும் காலன்பக் என்று சமஸ் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
எதிர்த் தரப்புக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தாலும் அவர்களை எதிரிகளாக காந்தியடிகள் கருதியதேயில்லை. தென்னாப்பிரிக்காவின் ஸ்மட்ஸ் என்னும் ஆட்சியாளர் காந்தியடிகளை சிறையில் தள்ளியவர். அந்த சிறைவாசத் தின் போது ஸ்மட்ஸுக்காக தன் கையால் தயாரித் த “ஷு”வைப் பரிசாக வழங்கினார். அவரது ஆன்மீக பலத்தைப் போற்றி ஸ்மட்ஸ் ஒரு கட்டுரை எழுதினார் என்பதையும் நாம் சமஸின் கட்டுரையிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.
இப்போதுள்ள தரம் தாழ்ந்த அரசியலை விமர்சித்து சமஸ் கட்டுரையின் இறுதிப் பத்திகளில் கீழ்கண்டவாறு எழுதுகிறார்:
———————————————————
காந்தியைப் பொறுத்த அளவில் எப்போதுமே எதிர்த் தரப்பு என்பது மாற்றுத் தரப்பே தவிர, எதிரிகள் தரப்பு அல்ல. வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்பவர்கள் எவருமே அல்லர். நீண்ட உரையாடலும் பரஸ்பரப் புரிதல்களும் நல்லெண்ணப் பரிமாறல்களுமே நீடித்த மாற்றத்துக்கான வழி. இரண்டாம் உலகப் போர் சூழலில், இங்கிலாந்துக்கு எதிர் வியூகம் அமைத்து சுதந்திரப் போராட்ட வெற்றியை விரைவுபடுத்தலாம் என்று ஏனைய தலைவர்கள் அத்தனை பேரும் சொல்லும்போதும்கூட காந்தி கூறுகிறார்: “வெற்றி அல்ல; அதைப் பெறும் வழிமுறை அதைவிட முக்கியம். அவர்கள் முதுகில் குத்தி, கிடைக்கும் சுதந்திரத்தை நான் விரும்பவில்லை. நியாயமான வழியில் சுதந்திரம் நம்மை வந்தடையும்.”
உலகப் போர் சூழலில், 2.7.1940 அன்று ‘ஒவ்வொரு பிரிட்டானியருக்கும்’ என்ற தலைப்பில், போருக்கு எதிராக அனைத்து ஆங்கிலேயர்களுக்குமான ஒரு கடிதத்தை எழுதினார் காந்தி. “நாஸிஸத்தை அழித்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், நீங்களே அதைப் பின்பற்றும்போது அதை ஒருபோதும் அழித்துவிட முடியாது” என்று குறிப்பிடும் அந்தக் கடிதத்தில், இறுதிப் பகுதியில் காந்தி சொல்கிறார்: “ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அஹிம்சை வழியைப் பின்பற்றினேன். இப்போதும் அதையே பின்பற்றுகிறேன். என் நாட்டின் எதிர்காலம் எப்படியிருந்தாலும் உங்களிடம் நான் கொண்டுள்ள அன்பு என்றும் குறையாமல் நீடிக்கும். என்னுடைய அஹிம்சை உலகளாவிய அன்புப் பெருக்கினால், மக்கள் அனைவரையும் அரவணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதில் நீங்கள் ஒரு சிறு பகுதியல்ல. அந்த அன்பே நான் இந்த வேண்டுகோள் விடுக்க என்னைத் தூண்டிற்று.”
அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான போரிலேயே இந்தியா தன்னுடைய வெற்றியை அன்பின் வழியில், சமூகங்களிடையேயான இணக்கத்தினூடே பெற வேண்டும் என்று நினைத்தவர் காந்தி. இந்தியா இன்றைக்கு எதிர்கொள்ளும் போர்களில் பலவும் அதன் உள்நாட்டுச் சமூகங்களுக்கு இடையேயானது. அன்பு எவ்வளவோ மிச்சம் இருக்கிறது. ஏன் வெறுப்பு அரசியலைக் கையில் ஏந்தி நிற்கிறோம்?
————————————————
நெல்சன் மண்டேலா தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான பின் நிகழ்த் த்திய முதல் உரையில் வெள்ளையரோடு நல்லிணக்கமும் வெறுப்பில் லாததுமான உறவு பற்றியே பேசினார் என்பது நினைவுக்கு வருகிறது.
சமஸ் கட்டுரைக்கான இணைப்பு ——————> இது
(image courtesy:tvnewsroom.org)