காலாவதியான சீன நீதிக்கதை
வி.சைதன்யா பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். மொழிபெயர்ப்பில் நிறைவே சாதித்திருக்கும் குழந்தை அவர். இருந்தாலும் ஜூலை- செப்டம்பர் 2015 “திசை எட்டும்” இதழில் அவர் மொழிபெயர்த்திருக்கும் குழந்தைகளுக்கான நீதிக்கதை “கவலைகளின் தாய்” தற்போதைய கால கட்டத்துக்குப் பொருந்தாதது.
பொஷி என்னும் பணக்காரருக்கு வியாபாரமும் மேலும் மேலும் பணம் சேர்ப்பதும் மட்டுமே குறிக்கோள். அவர் மனைவி கொண்டு வரும் உணவில் அரிய சுவை கூட அவருக்குத் தெரியாது. லி என்று அவர்களிடம் மிகவும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்யும் ஏழையும் அவன் மனைவியும் ஒரு நாள் முழுவதும் வேலை செய்தால் அவர்களுக்குக் கிடைப்பதோ அன்றைய பொழுது உணவுக்கான பணமே. பொஷிக்கு எதிர்மாறாக லி மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். எளிய வாழ்க்கை. மனம் நிறைவான வாழ்க்கை. அவன் இரவு உணவை சூரியன் மறையும் முன்பே சாப்பிட்டு விடுவான். ஏனெனில் இரவு மெழுகுவர்த்திக்குச் செலவு செய்யும் பணம் மீதமாகுமே. இரவு அவன் யாழை மீட்டியபடி மிகவும் இனிமையாகப் பாடுவான். அவன் இசையை அக்கம் பக்கத்தினர் அனைவரும் மிகவும் ரசித்துக் கேட்டார்கள். பொஷியின் மனைவியும் தான். அவர் லியின் ஏழ்மை நீங்கினால் இன்னும் மகிழ்ச்சியாக வாழ்வான் என்று கருதினார். அவனுக்குப் பணம் பரிசாகக் கொடுக்கலாம் என்று அவர் சிபாரிசு செய்ய பொஷியும் ஒப்புக் கொண்டார். 500 வெள்ளி நாணயங்களை அவனுக்குப் பரிசாகக் கொடுத்தார். “நீ எதாவது வியாபாரம் செய்யப் பயன்படும் ” என்றார். முதலில் தயங்கிய லி அவரது வற்புறுத்தலால் அதை வாங்கிக் கொண்டான். ஆனால் அன்றுமுதல் அவன் சரியாக சாப்பிடவில்லை. தூங்கவில்லை. யாழுடன் வரும் அவன் இசையும் நின்றது. பணத்தை என்ன செய்வது என்னும் கவலையில் அவனது இயல்பான மகிழ்ச்சியும் இசையும் காணாமற் போயின. இரண்டு நாட்கள் இப்படியே நிம்மதி இன்றிக் கழித்த அவன் மூன்றாம் நாள் பொஷியிடம் பணப்பையைத் திருப்பிக் கொடுத்து “உங்கள் இரக்கத் தை நான் பாராட்டுகிறேன். நான் ஏழ்மையிலும் மகிழ்ச்சியாகவே இருந்தேன். இந்த சிறிய பணப்பையால் இரண்டு நாட்களாகக் கவலை அதிகரித் து அதை என்ன செய்வது என்று யோசித்து என் நிம்மதி தொலைந்தது. பணமே கவலைகளின் தாய்” என்று கூறித் தன் வீட்டுக்குத் திரும்பினான். அன்று இரவே அவன் இசை மீண்டும் ஒலித்தது.
(image courtesy:wiki)
அருமை