நல்ல நாற்றங்கால் – தினமணி கட்டுரை


images3

நல்ல நாற்றங்கால் – தினமணி கட்டுரை

தொடக்கக் கல்வியின் முக்கியத் துவத் தை வலியுறுத் தும் “நல்ல நாற்றங்கால்” 5.10.2015 தினமணியில் கா.இர​.குப்புதாசுவின் கட்டுரை “தொடக்கக் கல்வியின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும் அமைப்பு பெற்றோர் ஆசிரியர் கழகம். இதனை ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பாக அமைத்திட வேண்டும்.” என்னும் உருப்படியான​ யோசனையை முன்வைக்கிறது. அருமையான​ கட்டுரை. அதற்கான​ இணைப்பு ——-> இது.

தொடக்கக்கல்வி பற்றிய​ எனது முந்தைய​ பதிவு ஒன்றை மீண்டும் கீழே பகிர்கிறேன்:

இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தை ஐந்தாம் வகுப்பு மாணவனால் படிக்க முடியவில்லை

ASER :ANNUAL STATUS OF EDUCATION REPORT என்னும் தன்னார்வ அமைப்பு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவரின் கல்வித் திறன் பற்றிய ஒரு கள ஆய்வை வருடா வருடம் நடத்துகிறது.

தோராயமாக, தமிழ் நாட்டில் இரண்டில் ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தைப் படிப்பது சிரமமாக இருக்கிறது. சென்ற வருடம் இது மூன்றில் ஒரு பங்காக இருந்திருக்கிறது. (2013-31.9% -2014-46.9%). இது ஒரு பனி மலையின் முகடே. பாடத்திட்டத்தில் 10% கூட மாணவரின் மூளையில் சென்று சேர்வதில்லை எல்லாப் பாடங்களிலும் என்பதே நிலை.

முன்னைவிட முன்னேற்றமே என்று அறிக்கை சொல்லுகிறது. தமிழ் நாட்டில் இன்னும் 67% மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் தான் படிக்கிறார்கள்.

தமிழ் நம் தலைவர்கள் எல்லோரின் மூச்சு. அவர்கள் வீட்டின் மின்விசிறிகளின் ஒவ்வொரு பட்டை மீதும் தமிழ் என்று எழுதி அதன் காற்று அடிக்கும் போதே தமிழ்க் காற்றாக அடிக்கும் படி வைத்திருக்கிறார்கள். (குளிர்சாதனப் பெட்டியின் எல்லாப் பக்கமும் தமிழ் என்று எழுதித்தான் உபயோகிக்கிறார்கள்).

அநியாயமே. இது என்ன ஆங்கிலவழிப் பாடக்கல்வி? தமிழ் வழி கற்றால்தானே அது மூளையில் ஏறும் என்று அரசியல்வாதி, அறிவுஜீவி எல்லோருமே கோடிக்கணக்கான பக்கங்கள் கொண்ட கட்டுரைகள், புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் தமிழில் எளிய பாடங்களைக் கூடப் படிக்க முடியாத நிலை. வளரும் சமுதாயம் தமிழே படிக்கத் தெரியாமல் பல வகுப்புகளில் தேறி மேல் வகுப்புக்குப் போகும் கல்வி முறை.

இந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் +2 முடித்து வரும் போது என்ன மேற்கல்விக்குத் தேவையான அடிப்படை அறிவு அவர்களுக்கு உறுதி செய்யப் பட்டிருக்கிறது?

இந்த அறிக்கை இன்னொரு இடத்தில் சுட்டிக் காட்டுவது அடிப்படைக் கணிதத்தைக் கற்க, சிறு சிறு வாக்கியங்களைப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது. சொற்றொடர்களை, பத்திகளைப் படிக்க முடியாவிட்டால் கணிதம் மட்டுமல்ல, பிற பாடங்களைக் கற்பதும் இயலாத ஒன்றே.

வருங்காலத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தரமான கல்வி அரசுப் பள்ளிகளில் ஏன் கிடைக்கவில்லை? பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தம் மாணவர் குறைந்த பட்ச அறிவுத் திறனுடன் அடுத்த வகுப்புக்குப் போக வேண்டும் என்ற முனைப்பு ஏன் இல்லை?

இந்த ஆசிரியர்கள் மட்டும் கெட்டவர்கள். பெற்றோர்- அரசியல்வாதி- அறிவு ஜீவி- ஊடக முதலைகள் இவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று இந்தக் கட்டுரையை முடித்து விடலாமா?

பெற்றோரில் எத்தனை பேருக்குத் தம் குழந்தைகள் உருப்படத் தேவையான பள்ளிச் சூழல் எது என்னும் அக்கறை இருக்கிறது? அதாவது ஒரு கற்பனை – முனைப்பான ஆசிரியர்-பெற்றோர்-மாணவர் கூட்டணி என்னும் கனவு அல்லது கற்பனை உண்டா?
அதிகாரத்தைப் பிடித்த அல்லது பிடிக்கக் காத்திருக்கும் அரசியல்வாதி என்றைக்காவது மாணவரின் கல்வித் தரம் பற்றி இரண்டு நிமிடமாவது செலவழித்திருப்பாரா?
விளம்பரம், சினிமா என்றே பிழைப்பை ஓட்டும் தொலைக்காட்சி எதிலாவது மாணவர் உருப்படுவது பற்றி அரை மணி நேரமாவது ஒரு நிகழ்ச்சி உண்டா?

அடிப்படையில் நமக்குத் தரமான கல்வி வழியாக அறிவு என்னும் அற்புதமான பலம் மிக்க இளைஞர்களை உருவாக்கும் கனவு அறவே இல்லை.

இப்படி நமக்கே அக்கறையில்லாத ஒரு விஷயத்தில் ஆசிரியர் மட்டும் துறவி போல கல்வி என்னும் தவம் புரிய வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு இருப்பது முரண் நகை.

இன்றைக்கு அவசரத் தேவை “பயிற்சி கொடுப்பவருக்கு பயிற்சி கொடு” என்பதாகும். (ட்ர்ஐந் த்ஹெ ட்ர்ஐநெர்).

வாரம் ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை (சனி ஞாயிறு தவிர ஒரு நாள் அதிகமாக) விட்டு விட வேண்டும். அன்று கண்டிப்பாக எல்லா அரசுப் பள்ளி ஆசிரியருக்கும் தாலுகா அளவில் பாடம் நடத்தப் பயிற்சி தர வேண்டும். அன்றைய தினம் மாணவருக்குப் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி நாள் முழுவதும் தரலாம்.

ஆசிரியருக்கு எப்படி மாணவரிடம் நடந்து கொள்ள வேண்டும்? எப்படி ஒரு கடினமான பாடத்தை எளிமையாக விளக்கி எல்லோருக்கும் புரிந்ததா என்று சரிபார்க்க வேண்டும் என்பதெல்லாம் பயிற்சியாகத் தரப் பட வேண்டும். அந்தப் பயிற்சியில் அவர்களுக்கு உதவியாக மடிக்கணினி மற்றும் அச்சடித்த பாட விவரங்கள் அல்லது மின்வடிவப் பாட விவரங்கள் எல்லாமே தர வேண்டும். அவர்கள் மீது நல்ல கவனம் செலுத்தி அவர்களை நாம் மரியாதையாக நடத்திப் பிறகே மாணவர் தேர்ச்சி மற்றும் அறிவுத் திறன் இவற்றை உயர்த்தும் கோரிக்கையை அவர்கள் முன் வைக்க வேண்டும்.

எல்லாப் பெற்றோரும் மாதாமாதம் ஒரு முறை எல்லா ஆசிரியர்களையும் சந்தித்து மாணவர் நலன் பற்றி அவர்கள் படிப்பில் செலுத்தும் கவனம் பற்றிப் பேச வேண்டும்.

வாரம் நான் கு நாட்களும் பள்ளிக்கு உற்சாகமாகச் சென்று வரும் சூழலை அரசு, அரசியல்வாதி, ஜாதித்தலைவர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் ஊடகங்கள் எல்லோரும் கைகோர்த்து உருவாக்க வேண்டும்.

கல்வித்தரம் உயராமல் சமுதாயம் உயர வாய்ப்பே இல்லை

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s