கடவுளுக்கு மதமில்லை
இன்று மானுடத்தைக் காரிருள் போல் சூழ்ந்து வரும் மதவெறி மற்றும் சகிப்பின்மை இவையே முன்னெப்போதையும் விட காந்தியடிகளின் வழிகாட்டுதலை நமக்கு நினைவுபடுத்துகின்றன, அவரது பொன்மொழிகளில் மதச்சகிப்புத்தன்மை பற்றிய சில இவை:
நாம் எல்லோருமே கடவுளின் குழந்தைகள்.. அவ்வாறிருக்க வேறு ஒரு பெயருள்ள கடவுளை வணங்குகிறார் என்னும் ஒரே காரணத்துக்காக மக்கள் எப்படி தம்முடைய சொந்த சகோதர சகோதரிகள் மீது தாக்குதல் செய்கிறார்கள்?
சகிப்புத்தன்மை என்னும் சொல்லை நான் ஏற்கவில்லை. இருப்பினும் அதைவிடவும் சரியான பொருள் தரக்கூடிய சொல் வேறு இல்லை. நான் அதை விரும்பாததற்குக் காரணம் அது மற்றொருவரது நம்பிக்கை (தன்னுடைய நம்பிக்கையுடன் ஒப்பிட) தாழ்ந்தது என்னும் உட்பொருள் தொனிப்பது. ஆனால் அகிம்ஸை மற்றவரது மதங்களுக்கு நமது மதத்துக்கு இணையான மதிப்புக் கொடுக்கும் படி கற்றுக் கொடுக்கிறது. அப்போது தனது மதத்தில் உள்ள சில குறைகளை நாம் ஒப்புக் கொள்கிறோம்.
(images courtesy:google.com)