ஒவ்வொன்றும் ஒரு காரணத்துக்காகத்தான் நிகழ்கிறது -காணொளி
நமது தேவைகளை ஒட்டி தொடர்புகளும் நமது தேடல்களை ஒட்டியே மனித உறவுகளும் உருவாகின்றன. நாம் செல்லும் வழி மற்றும் நம் தற்போதைய முன்னுரிமை இவை நம்மிடம் நெருக்கத்தில் இருக்கும் நபர்கள் கண்டிப்பாகப் பிரதிபலிக்கிறார்கள். நீண்டகால உறவு என்பது விரும்பியோ முடயன்றோ நிகழ்வதே இல்லை. அது உருவாவது. லட்சியம், முன்னுரிமை, மாண்புகள் ஒத்த நிலைப்பாடு அமைந்தாலும் அது ஒருவருக்கொருவர் உறுதிப்படும் காலம் வரை ஒரு நல்லுறவு உருவானதே தெரியாது. அந்த நல்லுறவு நீடித்து நிற்கும் என்று தெரியும் போஹ்டு ஒரு நிறைவே இருக்கும். பரவசமாக அது இருக்காது. மறுபக்கம் தேவைக்கேற்பத் தற்காலிகத் தொடர்புகள் வந்து போகும் அதில் நமக்கு பாதிப்பு இல்லாவிட்டாலும் சிலசமயம் ஏன் இந்த ஆள் வந்து போனார் என்று ஒரு அலுப்பு இருக்கும். அதை நேர்மறையாக எடுத்துக் கொள்ள அவருடனான குறுகிய கால அனுபவத்தில் நாம் நம்மைப் பற்றியே என்ன தெரிந்து கொண்டோம் என்று கூர்ந்து நோக்கும்படி கூறுகிறது இந்தக் காணொளி. பகிர்ந்து கொண்ட வாட்ஸ் அப் நண்பர்களுக்கு நன்றி. காணொளிக்கான இணைப்பு ———-> இது.
(image courtesy:kijansbook.wordpress.com)