Misophonia- மனுஷ்ய புத்திரன் கவிதை
நவீன கவிதையில் ஆங்கிலத்திலேயே ஆங்கிலச் சொற்கள் உண்டு என்பதை ஏற்கனவே பார்த்தோம். அடுத்த கட்டமாக நாம் ஒரு அசூயை (வெறுப்பும் எரிக்சலுமாக ஒன்றைப் பார்க்கும் போது தோன்றும் மனநிலையின் வடமொழிச் சொல். ஒருவர் உணவு உண்ணும் சத்தம் எனக்கு அசூயை அல்லது அருவருப்பானது என்றால் அது தான் மிஸொபோனியா. இந்த ஆங்கிலச் சொல்லின் விளக்கத்தை நாம் புரிந்து கொண்டு அதன் பிறகு தான் இந்தக் கவிதையைப் படிக்க வேண்டும். ( மனுஷ்யபுத்திரனா கொக்கா?)
இந்தப் புதிய புரிதலைத் தவிர்த்து கவிதை என்னை ஏமாற்றியது என்றே சொல்ல வேண்டும். உண்ணுவற்காக அடைந்த அவமானங்கள், கொடுத்த விலைகள், செய்த வேலைகள், நிகழ்த்திய துரோகங்கள், சகித்துக் கொண்ட சிறுமைகள், உருவாக்கிய உறவுகள், மேற்கொண்ட வேசைத்தனங்கள், நடத்திய யுத்தங்கள் என்று ஒரு பட்டியலிடுகிறார். பட்டியலிடுதல் நவீன கவிதையை நீர்க்கச் செய்யும் என்பது ஒரு பாடம்.
நிறைய எழுதித் தான் தீர வேண்டும். அது மேலும் நிறைய ஊற்றெடுக்க உதவவே செய்யும். மனுஷ்யபுத்திரனின் பல கவிதைகளில் ஒரு பட்டியல் முளைத்து விடுகிறது. அவர் தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவர். சந்தேகமே இல்லை. இருந்தாலும் விமர்சனம் என்று வரும்போது குறிப்பிடத்தான் வேண்டும். உயிர்மை அக்டோபர் 2015 இதழில் வந்துள்ளது இது.
(image courtesy:sodahead.com)