விருதுகளைத் திரும்ப அளிப்பது பற்றி மாலன் கட்டுரை
15.10.2015 தினமணியில் “அறச் சீற்றமா, அரைச் சீற்றமா?” என்னும் மாலனின் கட்டுரை வெளியாகி இருக்கிறது. சாகித்ய அகாதமி என்னும் அமைப்பின் வரையறைகள் மற்றும் விருதுகளைத் திருப்பித் தருவதில் உள்ள கருத் துவெளி அரசியல் இரண்டை பற்றியுமே அவர் விவாதிக்கிறார். கருத்து உரிமை மற்றும் மதச்சார்பின்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பது எழுத்தாளர்களே. அவர்கள் கூட்டாகவும் செயற்பட வேண்டிய காலகட்டம்தான் இது. ஆனால் முன்முயற்சியாகவும் தொடர்ச்சியுள்ள ஒன்றாகவும் அது இருக்க வேண்டும். எதிர்வினை போலவும் அரசியல் சூழல்களை ஒட்டியும் சார்ந்தும் சந்தர்ப்பவாதமாக இருக்கக் கூடாது.
அவரது கட்டுரைக்கான இணைப்பு ——-> இது
(image courtesy:youtube)