நாட்டுப்புறக் கலைஞர்களின் அவல​ வாழ்க்கை- சமஸ் கட்டுரை


220px-MayilattamDSC_0024.resized

நாட்டுப்புறக் கலைஞர்களின் அவல​ வாழ்க்கை- சமஸ் கட்டுரை

16.10.2016 தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் சமஸ் ” திருவிழா ஜோரா நடக்குது… சாமிதான் அநாதை ஆயிடுச்சு!” என்னும் கட்டுரையில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்,பொய்க்கால் குதிரை ஆடும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வறுமையும் சமூக​ நிராகரிப்புமான​ அவல​ வாழ்க்கையை நம் முன் நிறுத்துகிறார்.

கட்டுரைக்கான​ இணைப்பு———–> இது.

தமிழ் மக்களின் கவனத்தை மிக​ அதிகம் பெறுவோர் அரசியல்வாதிகளும் சினிமாத்துறையில் பணிபுரிவோரும் தான். (சினிமாவில் கலைக்கு இடமே இல்லாத​ போது அவர்களை நான் கலைஞர்கள் என்று குறிப்பிடுவதே இல்லை.)

இந்த​ அரசியல்வாதிகள் தமது தொலைகாட்சியில் நாட்டுப்புற​ நடனம், இசை மற்றும் தெருக்கூத்து தோல்பாவைக் கூத்து ஆகிய​ நாடகக் கலைகளுக்கும் அந்தக் கலைஞகளுக்கும் 1% நேரம் கூட​ ஒதுக்குவது கிடையாது. சினிமாக்காரர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம். பேய்க்குக் கிடைக்கும் முக்கியத்துவம் கலைகளுக்கு இல்லை. பெண்ணின் உடல் மையப் படுத்தப்படும். நளினக் கலைகளுக்கு இடமில்லை.

சரி. இவர்கள் திருந்தப் போவதே இல்லை. எனவே நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலைஞர்கள் அழியாமற் காக்க​ ஒரு நடைமுறை சாத் தியாமான​ வழி உண்டு. அதைப் பார்ப்போம்.

அன்னதானம் அரசின் திட்டமாக​ அறநிலையத் துறை மூலமாகக் கோயில்களில் தினசரி இப்போது நடக்கிறது. இதே போல் எல்லாக் கோயில்களின் எல்லா விழாக்களிலும் நாட்டுப்புறக் கலைகளின் பங்களிப்பு இருக்கும் என்று ஒரு உத்தரவு போட்டால் போதும். அதன் விளைவாக​ நலிந்து அழிந்து வரும் இந்தக் கலைகளும் கலைஞரும் பெரிய​ அளவில் பயனடைவர். அவர்களில் விற்பன்னராயிருப்போரைக் கண்டறிந்து அவர்கள் அரசுக் கல்லூரிகளில் ஒரு பட்டயப் படிப்பில் வழிகாட்டும் ஆசான்களாக​ உயர்த்த​ வேண்டும். அவர்கள் நலத்துக்கென​ ஒரு துறையை ஏற்படுத்தி தொடர்ந்து அந்தக் கலையில் பங்களிப்போருக்கு ஓய்வூதியம் மருத் துவ​ உதவி இவற்றுக்கும் வழி அமைக்க​ வேண்டும். அரசு சிறு மற்றும் பெரு நகரங்களில் வருடா வருடம் பொருட்காட்சி என்று ஒரு மாதம் பொழுது போக்கு அரங்குகளை அமைத்து ஒரு வணிக​ ரீதியான​ கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்கிறது. அதில் நாட்டுப்புறக் கலைகளுக்கு அதிக​ முக்கியத்துவம் கொடுத்து தினசரி அவர்கள் கலைகள் அரங்கேற​ வழி செய்யலாம்.

நம் பண்பாடின் மீது பற்று என்பது நாடி நரம்புகள் முறுக்கேற​ அரசியல் பேசுவது அல்ல​. நம் பண்பாட்டின் ஆணி வேர்களான​ நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாப்பதே அது.

(image courtesy:wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s