நீதிபதிகள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளலாமா?- நீதிபதி கே.சந்துரு கட்டுரை
அரசு மற்றும் பொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு தலைமை நீதிமன்றத்தில் நீதிபதிகளாக வருவோரைத் தேர்ந்தெடுக்கும் என்று சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அது அரசியல் சாசனப்படி சரியானதல்ல என்று உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்து விட்டது. முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு இந்தத் தீர்ப்பு நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. நீதிபதிகள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்வது எந்த நாட்டிலும் இல்லை என்று 17.10.2015தமிழ் ஹிந்து கட்டுரையில் குறிப்பிடுகிறார். அந்தக் கட்டுரைக்கான இணைப்பு ——————> இது.
அவர் தாம் பணிபுரிந்த காலத்தில் நேர்மை மற்றும் எளிமைக்குப் புகழ் பெற்றவர். தமது பணி நிறைவு பெற்ற போது பிரிவு உபசார விழா வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு மக்கள் பயணிக்கும் ரயிலில் வீட்டுக்குச் சென்றவர். நடுநிலையும், சமூக நலத்தின் பக்கம் சாய்வும் அவரது கட்டுரைகளில் தென்படும். நீதித்துறை மற்றும் வழக்கறிஞர் தொழில் தவறான காரணங்களுக்காக அடிக்கடி ஊடகங்களில் செய்திகளில் வருகின்றன. இந்த காலகட்டத்தில் சந்துருவின் இந்தக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. அந்தத் துறை நிபுணர் அவர். எனவே அவரது கருத்துக்கள் பற்றி எனக்கு விமர்சனமில்லை. ஆனால் இன்று ஒரு குடிமகனின் நம்பிக்கையை வழக்கறிஞர் மற்றும் நீதித்துறை இழக்கும் சூழல் இருப்பது நிதர்சனம். தமிழ்ச் சூழலில் தன் சிந்தனையை தமது தரப்பை விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் வெளிப்படுத்துபவர் சந்துரு. அவர் கட்டுரைகள் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை.
(image courtesy:mkgandhi.org)