மதநல்லிணக்கமான ஒரு “வாட்ஸ் அப்” செய்தி


images
மதநல்லிணக்கமான ஒரு “வாட்ஸ் அப்” செய்தி

இந்த செய்தியை அனுப்பியவர் என் பள்ளித் தோழன், இரண்டு சீக்கியரல்லாதவர்கள் இப்படியோரு செய்தியை பகிர்வதும் பிறருக்கு அனுப்புவதும் மனதுக்கு மகிழ்ச்சியளித்தது. வாட்ஸ் அப் செய்திக்கான இணைப்பு ———>இது.

பொற்கோயிலுக்கு வாசகர்களில் எத்தனை பேர் போயிருப்பார்கள் எனத் தெரியவில்லை.கட்டாயம் போய் வாருங்கள். பொற்கோயிலில் இருந்து நடக்கும் தூரத்தில் இருக்கிறது ஜாலியன் வாலா பாக். அந்த இடத்துக்குப் போய்த் திரும்பிய பிறகு வாழ்நாள் முழுவதும் நம் மனம் கண்டிப்பாக அங்கே அரங்கேறிய மனித பலியை எண்ணி எண்ணி வருந்தும். நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களும் (370பேர் இறந்தனர். 1300 பேர் காயமுற்றனர்.1919ல் குறுகிய வழி கொண்ட ஒரு மைதானத்தில் நடந்தது இது. இன்றும் அந்த இடம் அப்படியே இருக்கிறது. குண்டுகள் துளைத்த இடங்களை சுவர்களில் லாடம் இட்டு அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். பக்த்சிங்கின் தியாகத்தையும் நாம் அறிவோம். அந்த மைதானத்துக்கு நுழையும் வழி நம் வீட்டு வாயிலின் பிராதன கதவு அகலம் மட்டுமே. மக்கள் எப்படித் தப்பிக்க முடியும்? குண்டுகள் தீரும் வரை சுட்டார்கள்.

சுதந்திரம் பெற்ற பிறகும் அவர்கள் பிரிவினையில் பெரும் அளவு உயிர்ச்சேதம் மற்றும் வாழ்விடமிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப் பட்டார்கள். ஆயிரக்கணக்கில் வீட்டை நிலத்தை நாட்டை இழந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு இரையானார்கள். இரண்டு முறை நான் பொற்கோயில் மற்றும் ஜாலியன்வாலாபாக் சென்றேன். இரண்டாம் முறை அம்ரிட்சரில் இருந்து 30 கிமி தூரத்தில் உள்ள வாகா பார்டர் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குச் சென்றேன். அங்கே என் கைபேசியில் பாகிஸ்தான் நிறுவன சமிக்ஞைகள் கிடைத்தன. அந்த அளவு அச்சுறுத்தலான இடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள்.

அவர்களை மட்டுமல்ல சிறுபான்மையினர் பலரின் நற்பணிகளை, தியாகங்களை நாம் நினைப்பதில்லை, விவாதிப்பதில்லை, அங்கீகரிப்பதில்லை. அப்படி நாம் செய்யும் பட்சத்தில் நம் நாடு உலகிலேயே அமைதியானதாய் அழகானதாய் இருக்கும்.

நீ செய்ததைச் சொல்கிறாயா என்னும் கேள்வி எழலாம். மூன்று வருடங்களுக்கு முன் திண்ணை இணைய தளத்தில் நான் எழுதிய கட்டுரை கீழே:

கான் அப்துல் கபார் கானும் ஏனைய இஸ்லாமியச் சான்றோரும்

Khan-abdul-Gafar-khan

மகாத்மா காந்தியடிகள் உலகிற்கு அறிவித்த அஹிம்ஸைத் தத்துவம் இந்து மரபுகளுக்கே அன்னியமானது. ஜைன மதத்தில் வேண்டுமென்றால் ஓரளவு பொருத்தமான போதனைகள் கிடைக்கலாம். ஆனால் ஒரு இஸ்லாமியர் அதுவும் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்த ஆழ்ந்த மதப் பற்றுள்ள 19ம் நூற்றாண்டில் பிறந்த ஒருவர் அஹிம்ஸை வழி முறையைப் பின்பற்றியது மிகவும் அதிசயம். காந்தியடிகளின் அஹிம்ஸை முறையை ஒரு ஏகலைவன் போல ஏற்று ஆஃகானிஸ்தானில் ஒரு அஹிம்ஸைப் போராட்டத்தை நடத்தியவர் கான். 1985 நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப் பட்டார் (கிடைக்கவில்லை). 1987ல் பாரத் ரத்னா விருது பெற்றார். 1962 ல் அம்னெஸ்டி உலக அமைப்பின் “இந்த வருடத்துக் கைதி” என்று அறிவிக்கப் பட்டார்.

வெள்ளையரை எதிர்த்துப் போராடுவதற்காக 1928ல் ‘குதாயி கிட்மடகர்ஸ்’ என்னும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அஹிம்ஸைப் போராட்டத்திற்கு இஸ்லாமிய இளைஞர்களை வழி நடத்தினார். கைபர் கணவாயை ஒட்டிய பஷ்துனிஸ்தான் என்னும் பகுதியின் பஷ்துஷ் இன மக்களை உரிமை உணர்வுடன் போராட அழைத்தார். அவரது போராட்டத்தை பிரிட்டிஷ் ராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. அவரது வழி நடந்த போராட்டக்காரர்கள் ‘சிகப்புச் சட்டைகள்’ என்று அழைக்கப் பட்டனர். அவர்கள் மனதில் வீரத்தை விதைப்பதற்காக அவர் கூறிய குட்டிக் கதை புகழ் பெற்றது: கர்ப்பமுற்றிருந்த ஒரு பெண் சிங்கம் ஒரு நூற்றுக் கணக்கில் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைத் தாக்கியது. தாக்குதலைத் தொடர முடியாமல் அது ஒரு சிங்கக் குட்டியை பிரசவித்தது. பிரசவத்தின் போது மரித்து விட்டது. அப்போது பிறந்த சிங்கக் குட்டி ஆடுகளோடேயே வளர்ந்தது. இலை தழைகளைச் சாப்பிட்ட படி புலி, சிறுத்தை, ஓநாய் இவைகளைக் கண்டால் ஓடியபடி ஒரு ஆட்டின் இயல்பே அதற்கு இருந்தது. அது சிங்கமாக உருமாது ஆடுகளைப் போலவே கத்தியது. ஒரு நாள் அந்த ஆட்டு மந்தையை ஒரு சிங்கம் தாக்கியது. அது தனது இனத்தைச் சேர்ந்த ஒரு குட்டி, ஆடுகளோடு ஆடாக இருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தது. அந்தக் குட்டியை ஒரு சுனைக்கு அழைத்துச் சென்று அதன் பிம்பத்தை அதற்கே காட்டியது. அன்பு பக்துன்களே! நீங்கள் யாவரும் சிங்கங்கள். ஆனால் அடிமைத் தனத்தில் உங்கள் வீரத்தை மறந்து விட்டீர்கள்.

ஜாலியன் வாலா பாக்கில் நடந்தது போல பெரிய மக்கள் திரள் மேல் குண்டுகள் பாய்ந்தன 1928ல். ஆனால் பயன்படுத்தப் பட்ட துப்பாக்கிகள் அந்த அளவு பயங்கரமானவை அல்ல என்பதால் பலி எண்ணிக்கையில் குறைவாக இருந்தது. ஆனாலும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தம் நெஞ்சை நிமிர்த்திக் காட்டினார்கள். இது எல்லை காந்தி என்னும் கான் அவர்களின் மிகப் பெரிய சாதனை. அவரது இயக்கம் ஒடுக்கப் பட்ட பின் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து காந்தியடிகளின் நல்ல நண்பராகவும் ஆனார். உப்பு சத்தியாக்கிரப் போராட்டத்திலும் , வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பெரும் பங்காற்றினார்.

இந்தியா பாகிஸ்தான் என்னும் பிரிவினையை அவர் மிகவும் எதிர்த்தார். காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு பிரிவினைக்கு ஒப்புக் கொண்டபோது அவர் மிகவும் மனமுடைந்தார். அவரது பகுதி பாகிஸ்தானுக்குக் கீழே வந்தது. போற்றி வணங்கப்பட வேண்டிய ஒரு தலைவரை பாகிஸ்தான் அரசாங்கம் பல முறை சிறைப்படுத்தி கொடுமைகளுக்கு ஆளாக்கியது. நாடு கடத்தியது. அதையெல்லாம் மீறி அவர் பக்தூனிஸ்தான் என்று பத்தான்களுக்காக ஒரு நிலம் கேட்டுப் போராடினார். 1988ல் அவர் உயிர் பிரியும் வரை அவர் தொல்லைகளுக்கு ஆட்படுத்தப் பட்டார். பின் அவரது விருப்பப்படி அவரது உடல் ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் என்னும் இடத்தில் மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது. அன்று ஒரு நாள் ஆப்கானிஸ்தானில் அப்போது நடந்து கொண்டிருந்த உள் நாட்டுப் போர் நிறுத்தப் பட்டது.

தமது வாழ்நாளின் இறுதி நாட்களில் தாலிபான்களைக் கண்டித்தவர். தலாய் லாமாவின் திபெத் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்.

1947ல் உதயமான பாகிஸ்தான் இப்போது இல்லை. ஷேக் முஜிபர் ரஹுமானின் போராட்டத்தாலும் இந்தியத் தலையீட்டாலும் பங்களாதேஷ் பிறந்தது. இஸ்லாம் பெயரில் எந்த அநீதி வேண்டுமானாலும் எத்தனை காலம் வேண்டுமானாலும் நடக்க இயலாது என்று உலகுக்கு நிரூபித்தது பங்களாதேஷின் உதயம். தஸ்லிமா நஸ்ரின் என்னும் வங்க எழுத்தாளர் பெண் விடுதலை பற்றிப் பேசி கடுமையான எதிர்ப்புக்களுக்கிடையே தொடர்ந்து வெளி நாடுகளில் இயங்கி வருகிறார். கிரிக்கெட்டில் பட்டோடி நவாப், கிர்மானி, ஜாஹிர் கான், இர்பான் பதான், யூஸுஃப் பதான்.இசையில் பிஸ்மில்லா கான், உஸ்தாத் அம்ஜத் அலி கான், ஜாகீர் உஸேன், பர்வீன் சுல்தானா என பல உலகப் புகழ் கலைஞர்கள் இஸ்லாமியர்களே. எம் எஃப் ஹுசேன் உலகமே போற்றும் ஓவியர். பெரியவர் அப்துல் கலாம் தமிழகமே தலை நிமிரும் மிகப் பெரிய ஆளுமை.

இஸ்லாம் என்றாலே, முஸ்லிம் என்றாலே ஏன் நமக்கு இந்தப் சான்றோரும் விளையாட்டு வீரரும் நினைவுக்கு வருவதில்லை? நமது கண்ணோட்டம் மாற வேண்டும்.

(image courtesy: sacredsites.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s