இந்திய ‘புல்லட் ரயில்’ சீனாவுக்குப் போட்டியாக ஜப்பான் தந்துள்ள சலுகைகள்
நாட்டின் எல்லை தொடர்பாகவும், உலக அளவில் பொருளாதாரத்தில் போட்டியாகவும் சீனா ஜப்பானுக்குப் பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. ஜப்பானியர்கல் உழைப்பு மற்றும் செய்யும் தொழிலில் காட்டும் அர்ப்பணிப்புக்காகப் புகழ் மிக்கவர்கள். ஜப்பானை ஒப்பிட சீனா மிகவும் பெரிய நாடே. அதை எந்த விதத்திலும் ஜப்பானால் எதிர்கொள்ள முடியது. புல்லட் ரயில் தொழில் நுட்பத்தில் சமவாய்ப்புக்கான “புள்ளிகள்’ கோருவதில் (டெண்டர்) சீனா ஜப்பான் இருவருக்குமே வாய்ப்புக் கிடைத்தது. ஜப்பான் பல சலுகைகளைத் தந்தே அந்த வாய்ப்பைப் பெற்றது.
ஜப்பானால் வேறு எதுவும் செய்ய முடியாவிட்டாலும் பொருளாதார வாய்ப்புக்களில் போட்டியிட்டு தன்னால் எதிர் கொள்ள முடியாத சைனாவுக்கு சவால் விடும் போர்க்குணம் பாராட்டுக்குரியது. எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், இடையறா நில நடுக்கங்கள், சுனாமிக்கள், புயல்கல் இவை எல்லாவற்றையும் எதிர் கொண்டு, தமது கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணீப்பால் தம் நாட்டை உயர்த்துபவர்கள் ஜப்பானியர்கள். அவர்களது போராடும் மனத் திண்மை இந்த புல்லட் ரயில் ஒப்பந்தத்தில் வெளிப்பட்டுள்ளது.
தினமலர் செய்திக்கான இணைப்பு இது
(image and news courtesy: dinamalar)