அப்துல் ரகுமான் கவியுலகம் – ஜெயமோகன் கட்டுரை
ஜெயமோகன் கட்டுரைக்கு இணைப்பு ————->இது
அப்துல் ரகுமானை நான் இனிய உதயம் வாயிலாக சமீப காலத்தில் தான் வாசித்து வருகிறேன். அக்டோபர் 2015 இதழில் உள்ள “முள்ளும் மலர்” கவிதையிலிருந்து ஒரு பகுதி:
பக்தி
ஒரு சலவை என்றால்
இவர்கள் ஏன்
அழுக்காகவே இருக்கிறார்கள்
பக்தி
ஒரு விடியல் என்றால்
இவர்கள் ஏன்
இருளிலேயே இருக்கிறார்கள்
பக்தி
ஒரு பூவனம் என்றால்
இவர்கள் ஏன்
ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார்கள்
இப்படி ஒரு விஷயத்தை பல்வேறு விதமாக அழுத்தம் கொடுத்து அல்லது உருவகப்படுத்தி எழுதப்படும் அவரது கவிதைகளே நான் அதிகம் வாசித்தது. இந்த பாணியின் மிகப் பெரிய பலம் வாசிப்பவரது மனதில் பதியும். பலவீனம் ஒரு அலைபோல எழந்து மறைந்தும் போய்விடும். நவீன மரபில் இது தவிர்க்கப்படுகிறது.
கவிதை அல்லது எந்த நவீன படைப்பும் மேலே சிந்திக்க ஒரு பெரிய சிந்தனைத் தொடரை, மனதுள் ஒரு விவாதத்தை, ஒரு தேடலைத் துவக்கும் பொறி உள்ளதாக இருக்க வேண்டும். அவரை விமர்சிப்பது அவரை வாசித்து விவாதித்து மேற்செல்லும் ஒரு இலக்கிய விமர்சன சிந்தனைக்காகவே.
சூஃபி என்னும் இஸ்லாமிய ஞானமரபின் அடிப்படையில் அவர் நிறைய எழுதியிருப்பதாக ஜெயமோகன் கட்டுரையில் விவரித்திருக்கிறார். அப்துல்ரகுமானின் அந்தப் படைப்புக்களை நாம் வாசிக்க இது உந்துதல் தருவது.
Pingback: அஞ்சலி – அப்துல் ரஹ்மான் | சத்யானந்தன்