பொது சிவில் சட்டம் தேவையா?- தினமணி கட்டுரை
பொது சிவில் சட்டம் என்பது அரசியலுக்காக வலதுசாரிகள் கையில் எடுப்பது அவர்களது குருஜி கோல்வால்கரே இதில் அவசரம் காட்டக் கூடாது என்று கூறியிருக்கிறார் என்று ஜெ.ஹாஜாகனி விரிவான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பொது சிவில் சட்டம் என்பது இன்றைய அளவில் ஒரு கற்பனையே. அது தேவை என்பதும் தேவை இல்லை என்பதும் விவாதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அரசியலாக்கும் அவசரம் மற்றும் மதநல்லிணக்கம் என்ன ஆனால் எனக்கென்ன என்னும் அடாவடித்தனம் இரண்டுமே இருக்கக் கூடாது. இந்தக் கட்டுரையில் மிகவும் சுவாரசியமான ஒரு தகவலை அவர் பகிர்கிறார். 1974ல் ஒரு அமைப்பு எடுத்த கணிப்பில் இந்துக்கள் பலதார மணத்தில் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று தரவுகள் இருந்தன என்று வாதிடுகிறார். இந்தக் கோணத்தில் சமீபத்திய புள்ளிவிவரங்களையும் பார்க்க வேண்டும்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் விவாதமின்றி பண்பட்ட சமுதாயம் உருவாக வாய்ப்பே இல்லை. ஹாஜாகனியின் கட்டுரை ஒரு விவாத்துக்கு வழி வகுக்கும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பரிந்துரைகளான நெறிமுறைகள் அடிப்படை நெறிமுறைகளுக்கு ஒப்பாக நிலைநாட்டப்பட முடியாதவை. இதற்குப் பல் உதாரணங்கள் உண்டு என்றும் அவர் எடுத்துக் காட்டுகிறார்.
கட்டுரைக்கான இணைப்பு —————->இது.
(image courtesy:slideshare.net0