Monthly Archives: October 2015

வெங்கட் சாமிநாதன் எனும் எதிர்ப்புக் குரல்!- தமிழ் ஹிந்து கட்டுரை


வெங்கட் சாமிநாதன் இலக்கியப் பணியையும் தமிழ்ச் சூழலில் அவர் இயங்கும் போது பெற்ற​ எதிர்ப்புக்கள் அதைத் தாண்டி அவரது பங்களிப்பு பற்றிய​ விரிவான​ கட்டுரை தமிழ் ஹிந்து 23.10.2015 இதழில் வாசிக்கக் கிடைத்தது. அதற்கான​ இணைப்பு ——–>இது.

Posted in அஞ்சலி | Tagged , | Leave a comment

ஜென் – ஒரு புரிதல்


ஜென் – ஒரு புரிதல் சத்யானந்தன் பகுதி (1) ஜென் (ZEN) என்பதற்கான இந்திய மொழிபெயர்ப்பு தியானம். சான் என்னும் சீனப் பதமே ஜென் என்னும் பெயருக்கான மூலம் என்று கருதப்படுகிறது. 25 நூற்றாண்டுகளுக்கு மேற் பழமையான ஜென் தத்துவம் தாவோயிசம் மற்றும் பௌத்ததின் சங்கமத்தில் உருவானதாகக் கருதப் படுகிறது. இந்தியத் தத்துவ மரபில் பொருத்திப் … Continue reading

Posted in திண்ணை | Tagged | Leave a comment

மனித உறவுகள் பற்றி சிறியவர் பெரியவருக்கான ‘வாட்ஸ் அப்” நீதிக்கதை


மனித உறவுகள் பற்றி சிறியவர் பெரியவருக்கான ‘வாட்ஸ் அப்” நீதிக்கதை குழந்தைகளுக்கான நீதிக்கதை என்று ‘வாட்ஸ் அப்” பில் நண்பர்கள் பகிர்ந்தார்கள். அந்தச் செய்தியிலேயே இது பெரியவர்களுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கான இணைப்பு ————————-> இது. குடும்பங்களுக்கு உள்ளேயோ, பொது இடம், சமூகம், பணியிடம் என்று எங்கேயும் நீண்ட கால உறவுக்கான தேடலை நாம் காண … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

அஞ்சலி – வெங்கட் சாமிநாதன்


அஞ்சலி – வெங்கட் சாமிநாதன் விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மரணம் பற்றி ஜெயமோகன் இணைய தளத்தில் வாசித்த போது மனது மிகவும் வருத்தப்பட்டது. 40 50 ஆண்டுகளாக அவர் தமிழ் இலக்கிய விமர்சகராக இயங்கியவர். இங்கே வாசகர்களுக்கு இலக்கிய விமர்சகர்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் வேண்டும். இலக்கிய விமர்சகர்கள் தமது கட்டுரைகள் மூலம் படைப்பாளிகளுக்கு அவர்கள் … Continue reading

Posted in அஞ்சலி | Tagged , | Leave a comment

மதநல்லிணக்கமான ஒரு “வாட்ஸ் அப்” செய்தி


மதநல்லிணக்கமான ஒரு “வாட்ஸ் அப்” செய்தி இந்த செய்தியை அனுப்பியவர் என் பள்ளித் தோழன், இரண்டு சீக்கியரல்லாதவர்கள் இப்படியோரு செய்தியை பகிர்வதும் பிறருக்கு அனுப்புவதும் மனதுக்கு மகிழ்ச்சியளித்தது. வாட்ஸ் அப் செய்திக்கான இணைப்பு ———>இது. பொற்கோயிலுக்கு வாசகர்களில் எத்தனை பேர் போயிருப்பார்கள் எனத் தெரியவில்லை.கட்டாயம் போய் வாருங்கள். பொற்கோயிலில் இருந்து நடக்கும் தூரத்தில் இருக்கிறது ஜாலியன் … Continue reading

Posted in தனிக் கட்டுரை | Tagged , , , , , , , | Leave a comment

நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்


நிர்வகிக்கப்பட்ட​ கர்வம் சத்யானந்தன் பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக​ யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது அடிக்கடி சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ​ பங்கம் நேரும் போது பழுது பார்ப்பவர் மையமாகிறார் என் தேவைகளை முடிவு செய்யும் நிறுவனங்கள் என்னையும் அவரையும் சேர்த்தே நிர்வகிக்கிறார்கள் அவ்வழியாய் என் கர்வங்களையும் சுதந்திரமான​ … Continue reading

Posted in கவிதை, திண்ணை | Tagged | Leave a comment

தற்கொலை வேண்டாம் – மனத்திண்மை வேண்டும்- தினமணி கட்டுரை


தற்கொலை வேண்டாம் – மனத்திண்மை வேண்டும்- தினமணி கட்டுரை முருகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் பற்றிய​ ஒரு வித்தியாசமான​ கண் ணோட்டத்தை “தேவை நல்ல மனநிலை!” என்னும் 20.10.2015 தினமணி கட்டுரையில் முன்வைக்கிறார். மிதமிஞ்சிய​ அளவு சொத்து பணம் இவற்றை ஊழல் மற்றும் முறைகேடான​ வழியில் சேர்த்து, பதுக்குவது மன​ நோய் என்று குறிப்பிடுகிறார். இது சிந்தனைக்கு … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , , , , | Leave a comment

உலக​ வெப்பமயமாதல்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை


உலக​ வெப்பமயமாதல்- தமிழ் ஹிந்துவில் கட்டுரை உலக​ வெப்பமயமாதல் பற்றிய​ எச்சரிக்கைகள் ஊடகங்களில் வெளிவராமல் ஒரு வாரம் கூடக் கடப்பதில்லை. தமிழ் ஹிந்து கட்டுரை இதன் மையப் பிரச்சனையைத் தொட்டிருக்கிறது. அதற்கான​ இணைப்பு ———–> இது. வளரும் நாடுகளுக்கு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஒப்பிட​ மாசு பெரிய​ பிரச்சனை அல்ல​. வளர்ந்த​ நாடுகளில் மாசுக்காக​ எந்தக் … Continue reading

Posted in நாட் குறிப்பு | Tagged , , , | Leave a comment

குடிமை – மாத்தளை சோமுவின் சிறுகதை


குடிமை – மாத்தளை சோமுவின் சிறுகதை நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றிக் கொண்டு நாம் அரசியல் நடத்துவதென்றால் லட்டுபோல இருக்கவே இருக்கிறது இலங்கைத் தமிழர் பிரச்சனை. உண்மையில் இன்றைய இலங்கைத் தமிழர் நிலை என்ன? இளைய அப்துல்லா எழுத்தில் நாம் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்கிறோம். மாத்தளை சோமுவின் ‘குடிமை’ என்னும் அக்டோபர் தீராநதியில் வந்துள்ள கதையில் … Continue reading

Posted in விமர்சனம் | Tagged , , | Leave a comment

சாருநிவேதிதாவின் நகைச்சுவை


சாருநிவேதிதாவின் நகைச்சுவை வாழ்க்கையில் நகைச்சுவையே இல்லை. அதனால் எழுத்தாளர்களின் எழுத்தில் 1% அளவு கூட​ நகைச்சுவையே கிடைப்பதில்லை. சாருநிவேதிதாவின் இந்தக் கட்டுரை சமகாலத்தில் நான் படித்த​ அருமையான​ அங்கதம் மிகுந்த​ நகைச்சுவை. அதற்கான​ இணைப்பு ————————->இது.

Posted in நகைச்சுவை, நாட் குறிப்பு | Tagged | Leave a comment