மருத்துவ இட ஒதுக்கீடு பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – தினமணி தலையங்கம்
இட ஒதுக்கீடு விவாதத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்-. இட ஒதுக்கீடு ஒன்று தான் சமூக நீதி.- வறிய, நலிந்த, தலித் ஆனவர்கள் இட ஒதுக்கீட்டை வைத்து நாங்கள் நடத்தும் அரசியலால் மட்டுமே பயன் பெறுவார்கள் என்னும் அரசியல் கோஷங்களுகு இடையே தினமணி எழுதியுள்ள தலையங்கம் சிந்தனைக்கு உரியது. சமூக நீதிக்கு இரண்டு சூழல்கள் வேண்டும். ஒன்று அடிப்படைக் கல்வி எல்லோருக்கும். இரண்டாவது உயர்கல்வியில் கிராமப் புற மாணவர்கள் போட்டியும் திறமையும் காட்டுமளவு அவர்களை உயர்த்தும் அரசு சாரா அரசாங்க பயிற்சி அமைப்புகள். இட ஒதுக்கீட்டை வசதியானவர்கள் பயன்படுத்தாமல் நலிந்தோருக்கு விட்டுக் கொடுப்பது துவங்கு புள்ளியாக இருக்கும். குடும்பப் பின்னணியில் பட்டதாரியே இல்லாத குடும்பங்களுக்கு இட ஒதுக்கீடு கண்டிப்பாகத் தொடரத்தான் வேண்டும். எந்தெந்தத் துறைகளில் முடியுமோ அத்தனை துறையிலும். மேற்படிப்புக்கு உண்டான திறமை மற்றும் போட்டியிடும் திறன் வளர்க்கும் அமைப்புக்கள் இருந்தால் தானாகவே அந்தப் பின்னணி உள்ளோர் உயர்கல்வியிலும் போட்டியில் வெல்வார்கள்.
தினமணியின் தலையங்கத்துக்கான இணைப்பு ——–>இது.
(image courtesy: wiki)