சிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை


download

சிறுமியின் பேதமை மையமாய் கு.உமாதேவியின் கவிதை

காலச்சுவடு நவம்பர் 2015 இதழில் ஒரு கவிதையில் உமாதேவி தலித் என்பது ஏன் இன்னும் இழிந்த அடையாளமாக மேல்ஜாதியினரால் கருதப் பட வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். பிரச்சார வாடை இல்லாமல் மிகவும் கூர்மையான ஒரு கவிதையைத் தந்திருக்கலாமே என நினைக்கும் போதே அடுத்துவரும் கவிதை “தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது”. மிகவும் நன்றாகவே அமைந்திருக்கிறது கவிதை. நவீன கவிதையில் இறுதிப்பகுதி மட்டும்தான் ஆணிபோல மனதில் இறங்கும் என்பதில்லை. நவீன கவிதை மறுவாசிப்புக்களில் புதிய புதிய பரிமாணங்களுடன் வெளிப்படும். இந்தக் கவிதையை நாம் மறுவாசிப்பில் மட்டுமே சென்றடைகிறோம்.

பாவாடை சட்டை போட்ட ஒரு சிறுமிக்கு என்ன தெரியும்?

ஆனால் அவளின் உள்ளே எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு வருங்கால சாதனையாளர், பொறுப்பான அன்னை, தலைமை ஏற்று வழி நடத்த வல்ல வலிமையான ஆளுமை இருக்கிறார் என்று யாராவது நினைக்கிறார்களா? அதிக பட்சம் ஒரு குடும்பத்தின் சதுரத்தைத் தாண்டாத மனைவியும் தாயுமாவாள் என்றே தாய் தந்தை நினைக்கக் கூடும். உண்மையிலேயே ஒரு பெண் குழந்தை தலைமை குணங்களுடன் உயர வேண்டும் என்று விரும்புபவர் யாராவது உண்டா? விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் எங்கேயோ இருக்கலாம். அது சமூகத்தை எந்த விதத்திலும் பாதிக்க இயலாத அளவு குறைவானவரே. எனவே சமுதாயத்துக்கு ஒரு பெண் குழந்தையின் உள்ளே உள்ள திறன்கள் அல்லது ஆளுமைச் சிறப்புகள் தெரியாது. அதாவது தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது. அப்படி தெரியாமற் போவதாலேயே அவளை உயர விடாமல் செய்யப் போகிறார்கள் – இரையாக வேட்டையும் ஆடி விடலாம்.

கவிதையின் தொடக்க பத்திகளில் சிறு பறவைக்காகக் காத்திருக்கும் பாம்பு, தன் இருப்பிடமான காட்டிலேயே உணவில்லாமல் குடும்பத்தோடு பசியில் அலையும் யானைக் கூட்டம், மானைக் குறிவைக்கும் புலி, இவை யாவற்றையும் வேட்டையாடத் தயாராய் வேடுவன் என இரைகளும் வேட்டையிடுபவையுமான சூழல் சுட்டப்படுகிறது. யானை பசிக்காக வேட்டையாடாமல் தன் நிலையிலிருந்து இறங்கும் கட்டாயம் தரும் வலியைச் சுட்டுகிறது.

பேதமை மிகுந்த பெண் குழந்தைக்கு இவையெல்லாம் தெரியாது தானே?

கவிதையின் தொடக்க வரிகளும் இறுதி வரிகளும் கவிதையைத் தூக்கி நிறுத்துகின்றன

காட்டாற்றின் ஓரம் கசிந்து
ஈரத்தால் கருப்பாகிறது காடு —– தொடக்க வரிகள். யாரை / எதை இந்தக் கருப்பாவது படிமமாக உணர்த்துகிறது? பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அவளின் குடும்ப வாழ்க்கை பற்றி மட்டுமே கவலைப்படுவதும் அவளிடம் தன்னம்பிக்கைக் குறைவு என்னும் கறையைப் படிய வைக்கலாம். அன்பு என்னும் ஈரம் அவளின் கூர்மையைத் துருப்பிடிக்க அடித்தும் விடலாம்.

இறுதி வரிகள் நுட்பமானவை

கணுக்கால் வரை பாவாடை தூக்கி
காலில் ஈரம் படாமல் இருக்க
நுனிக்காலால் நடந்து வருகிறாள்
முரண்பாடு புரியாத பைத்தியக்காரி

ஒரு பெண் கவிஞருக்கு மட்டுமே இந்த சாதாரண காட்சியில் இவ்வளவு ஆழமான ஒரு பின்புலம் வசப்பட முடியும். காலச்சுவடு பெண்களின் பல படைப்புக்களை இந்த இதழில் தந்திருக்கிறது. பெரும்பான்மை அவர்கள் படைப்புக்களே. உருப்படியான ஒரு பணி இது.

(image courtesy: youtube)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in கவிதை, விமர்சனம் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s