முன்னோருக்குத் திதி கொடுப்பதால் என்ன பயன்? -14ம் நூற்றாண்டு விவாதம்


images

முன்னோருக்குத் திதி கொடுப்பதால் என்ன பயன்? -14ம் நூற்றாண்டு விவாதம்

தினமணி நாளிதழில் ஜங்ஷன் என்னும் பகுதி ஒவ்வொரு புதன் கிழமையும் வெளியாகிறது. அதற்கான இணைப்பு இது.

தொன்மையான இந்தியாவில் மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடம் இருந்ததை தத்துவ தரிசனம் என்னும் தொடரில் உதவி ஆசிரியர் பத்மன் எழுதும் பகுதியில் “லோகாதய வாதம்’ என்னும் சிந்தனைத் தடம் பற்றிய பகுதி என்னை மிகவும் கவர்ந்தது. பகுத்தறிவு மற்றும் நாத்திக வாதத்துக்கு இந்திய மரபில் இடம் இருந்திருக்கிறது. முன்னோருக்குத் திதி கொடுப்பது பற்றி சார்வாகர் முன் வைத்த வாதம் கீழே:

————————————————————
கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அத்வைத தத்துவ ஞானி சாயன மாதவர், தனது சர்வதர்சன சங்கிரஹ என்ற நூலில், சார்வாகர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்நூலில், சார்வாகர்களின் நாத்திக வாதம் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது…

சொர்க்கமோ, நரகமோ, ஆன்மாவோ, முக்தியோ எதுவும் இல்லை. வேள்விச் சடங்குகள், ஒரு சிலரின் பிழைப்புக்கான உபாயம் அன்றி வேறில்லை. இறந்தபின் எரிந்து சாம்பலாகும் உடம்பு, மறுபடி எப்படிப் பிறக்கும். இறந்தவன் வேறு உலகுக்குச் செல்வான் என்றால், ஏன் அவன் தனது நேசத்துக்குரியவர்களைக் காண்பதற்கு மறுபடி பூமிக்கு வரக்கூடாது. மறைந்த தந்தைக்கு ஹோமத்தீயில் மகன் கொடுக்கும் திதிப் பொருட்கள் அவரைப் போய்ச் சேரும் என்றால், ஏன் மகனே அந்தத் தீயில் குதித்து நேரடியாகத் தந்தையிடம் போய்ச் சேரக்கூடாது என்றெல்லாம் அக்காலத்திலேயே வினவியிருக்கிறது லோகாயதம் எனப்படும் சார்வாகம்.

(இது அறிதலின் ஒரு தொடக்கம் மாத்திரமே. இதற்கான பதில்களைப் பிற தத்துவங்கள் தருவதுடன், மேற்கொண்டு ஆய்வுகளை முன்னகர்த்திச் செல்வதைப் பின்னர் காண்போம்).

லோகாயத தத்துவம் பற்றி சுருக்கமாகக் கூறுகின்ற ஸ்லோகம் இதோ –

அததோ தத்வம் வ்யாக்யஸாம:

ப்ருத்வியாப்தேஜோ வாயுர் இதிதத்வானி

தேப்யாஸ சைதன்யம் சின்வதிப்யோ மதசக்திவத்.

இதன் பொருள்

லோகாயதம் என்ற கோட்பாட்டை விளக்குவோமேயானால், நிலம் (ப்ருத்வி), நீர் (ஆபஹ்), தீ (தேஜ), வளி அதாவது காற்று (வாயு) ஆகியவையே உலகத் தோற்றத்துக்கான நான்கு அடிப்படைக் காரணிகள். இவற்றின் சேர்க்கையால், புளிப்புப் பொருட்களின் கலப்பால் போதை தோன்றுவதுபோல அறிவு (சைதன்யம்) தோன்றியது.
————————————————————–

லோகாதயத்துக்குப் பிராமணர்களே ஆதரவாயிருந்தார்கள் என்பது கட்டுரையின் மற்றொரு பகுதி:

ராமாயண காவியத்தில், தந்தை தசரதனின் ஆணையை ஏற்று கானகம் செல்லும் ராமரைச் சந்திக்கும் ஜாபாலி என்ற முனிவர், உலகியல் இன்பங்களைத் துய்ப்பதே வாழ்க்கை என்றும், ஆகையால் அரச பதவியைத் துறந்து கானகம் செல்வது சரியல்ல என்றும் வாதிடுவதாகவும், முன்னோர்களுக்குத் திதி கொடுத்தல் போன்ற வைதீகச் செயல்களில் அர்த்தம் இல்லை என்று போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாபாலி முனிவர், லோகாயதவாதி என்று கூறப்படுகிறது.

கன்வ மகரிஷியின் ஆசிரமத்தில், மற்ற தத்துவங்களைவிட லோகாயதம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததாக மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதப் போருக்குப் பின்னர், வேள்வி ஒன்றை நடத்திய தர்மரைச் சந்தித்த சாருவாகன் என்ற பிராமணத் துறவி ஒருவர் (பிராமணர் தோற்றத்தில் வந்த அசுரன் என்றும் விமர்சிக்கப்படுகிறது), போரினால் ஏற்பட்ட அழிவுக்காக பாண்டவர்களைச் சாடுவதுடன், வேள்விச் சடங்குகளால் ஒரு பயனும் இல்லை என்று வாதிடுவதாகவும், மகாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்காவதார சூத்திரம் என்ற பௌத்த இலக்கியம், மஹாமதி என்ற லோகாயத பிராமணன், கௌதம புத்தரிடம் விவாதம் செய்ததாகக் கூறுகிறது. இதேபோல், சம்யுக்த நிகாய, அங்குத்தர நிகாய ஆகிய இரு பௌத்த நூல்களில், கௌதம புத்தருடன் இரண்டு லோகாயத பிராமணர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

இயற்கை வாதம் பேசும் லோகாயதம், பிராமணர்களின் தத்துவங்களில் ஒன்றாகவே மதிக்கப்பட்டது என்பதை கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த ஞானி புத்தகோசர் குறிப்பிடுகிறார். வானவியல், பிரபஞ்சவியல், உலோகவியல், உடல்கூறு ஆகியவற்றை உள்ளடக்கிய லோகாயதம், பிராமணர்களின் ஒரு பிரிவினர் இடையே வழிவழியாகப் பயிற்றுவிக்கப்பட்டது என்பதையும், இதனை பிராமணர்கள் கற்பது வேதக் கல்விக்கு ஒவ்வாதது இல்லை என்று கருதப்பட்டதாகவும் புத்தகோசரின் வாயிலாக அறிய முடிகிறது. “லோகாயதம் உச்சதி விதண்டாவாத சத்தம்” என்கிறார் புத்தகோசர். லோகாயதம் என்பது வாக்குவாதத்தில் நிபுணர்களது நூல் என்று இதற்குப் பொருள். (தற்போது விதண்டாவாதம் என்பது தேவையற்ற வாதம் புரிவதாக பொருள் திரிவுபட்டுள்ளது).

—————————————————————

தொன்மை இந்தியாவில் மாறுபட்ட சிந்தனைகளுக்கு இடமிருந்தது என்பதற்கு ஒரு உதாரணமாகவே இதைக் கொள்ளலாம். சைவம் வைணவம், சைவத்தின் அத்வைதம், வைணவத்தின் விசிஷ்டாத்வைதம், மற்றும் இவை இரண்டிலிருந்தும் வேறு படும் த்வைதம் இவை யாவுக்குமே இடமிருந்தன.

வெவ்வேறு சிந்தனைத் தடங்கள், ஒன்றை ஒன்று நிராகரிக்கும் சிந்தனைகள் சேர்ந்து இருந்த காலமே தொன்மையான காலம். பிற்காலத்தில் சமூகத்தைத் துண்டாடுவதற்காக தொன்மைக்கால வழக்கங்கள், நம்பிக்கைகளை பயன்படுத்துவது கண்டிப்பாக உள்நோக்கம் கொண்டதே என்பதற்கு இவை ஆதாரங்கள்.

(image courtesy:star2.com)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s