THE WALK- என்னை அதிக அளவு அச்சுறுத்திய படம்
திரைப்படத்துக்குப் போகலாம் என்று என் மகன் முடிவெடுத்த போது, உட ற்பயிற்சியில் ஆர்வமுள்ள அவர் ஒரு மாராதான் என்னும் வெகு நீண்ட நடைபயணம் பற்றிய படத்துக்கே அழைத்துப் போகிறார் என்று நினைத்திருந்தேன்.
படம் ஆரம்பித்து சற்று நேரத்தில் WIRE WALKING என்னும் கலையின் மீது தீரா மோகம் கொண்ட ஒரு இளைஞனின் (பிலிப்) கதை இது என்று பிடிபட்டது. பாரிஸில் நடுத்தர குடும்பப் பின்னணி உள்ள ஒரு இளைஞனுக்கு WIRE WALKING என்னும் கலையைக் கற்கும் ஆசை அளவுக்கு அதிகமாக அவனது அப்பாவால் வீட்டை விட்டு வெளியேற்றப் படுகிறான். பிறகு சர்க்கஸ் கலையில் இதில் மிகவும் தேர்ச்சி பெற்ற ரூடி என்பவரிடம் பிலிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறான்.
அடிப்படைப் பயிற்சி கிடைத்த பின் பாரிஸின் தெருக்களில் அவன் தனது திறமையைக் காட்டுகிறான். அப்போது தெருவில் வயலின் வாசிக்கும் ஒரு பெண்ணுடன் (ஆன்) அவனுக்குப் பரிச்சயம் ஏற்படுகிறது. இருவரும் நண்பர்களாகிறார்கள். அவனது முயற்சிகளில் முதல் கூட்டாளியாகவும் அவள் அமைகிறாள். ஒரு ஏரியின் மீது நீண்ட கயிறு கட்டி நடக்கும் முயற்சியில் அவன் மன ஒருமை தவறியதால் தோற்று விடுகிறான். பிறகு ஒர் தேவாலயத் தின் கோபுரங்களுக்கு இடையே நடக்கிறான். ஆனால் அந்த கோபுரங்களை விடவும் பன்மடங்கு உயரமான அமெரிக்காவின் நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் எனப்படும் உலக வர்த் தக மையக் கட்டிடத் தின் மீது அவை கட்டி முடிக்கப்படும் முன்பு நடக்க விரும்புகிறான். 110 மாடிகள் உள் ள அந்த இரட்டைக் கட்டிடங்களும் 1974 இறுதியில் திறக்கப் பட இருப்பதால் அதற்கு முன்பே தன் சாகச நிகழ்ச்சி நடந்து முடிய வேண்டும் என அவன் திட்டமிடுகிறான். மிகுந்த முயற்சிகளுப்பின் ஆசானான ரூடியின் நல் லாசிகளும் முக்கியக் குறிப்புகள் கருவிகள் அவனுக்குக் கிடைக்கின்றன. தோழியான ஆன் தவிற நான் கு ஆண்களை அவன் கூட்டாளிகளாகச் சேர்த்து ரகசியமாக முதல் நாள் இரவு தேவையான முறுக்குக் கம்பி இழை, அதைத் தாங்கும் சுவர்மீது பொருத்தும் கட்டைகள் எனப் பலவற்றை, பொழுது விடியும் முன் இரண்டே மணி நேரத்தில் கூட்டாளிகள் உதவியுடன் பொருத்தி விடுகிறான்.
இந்த இடத் தில் நமக்கு எழும் முதல் அச்சம் அவனுக்கு இதில் வெற்றி கிடைக்காவிட்டால் அவன் மனம் வருந்தும் துன்ப நிலை சம்பந்தப் பட்டது. அடுத்து இரட்டை கோபுரங்களுக்கு நடுவில் ஒரு பெரிய குச்சியை வைத் து ஒரு முறை கடக்கும் அவன் மறுமுனையிலிருந்து திரும்பி வருகிறான். அதற்குள் காவல் துறை அங்கு வரவே இன்னும் உற்சாகமாகி அந்தக் கம்பி மீது அமர்வது, படுப்பது, முட்டி போடுவது எனப் பல சாகசங்களைச் செய்கிறான். அப்போது ஒவ்வொரு கணமும் நமக்கு அவன் விழுந்து உயிர் போய் விடுமோ என்னும் அச்சம் உச்சகட்டமடைகிறது. கதையின் முடிவு தெரியாமல் நாம் பார்ப்பதால் நமக்கு மிகவும் அச்சம் ஏற்படுகிறது. உலக அளவில் கவனிப்புப் பெறும் இவன் நியூயார்க் நகர மேயரால் மன்னிக்கப்பட்டு அந்த கோபுரங்களின் மேல் தளத்துக்குப் பார்வையாளராகப் போய்த் திரும்பும் அனுமதி அட்டையை நிரந்தரமாகப் பெருகிறான்.
சாகசம் மேற்கத்திய பார்வையாளரைக் கவருமளவு நம்மைக் கவர்வதில்லை. ஆனால் அவனது லட்சியவெறியும் அதில் அவன் காட்டும் அர்ப்பணிப்பும் நம்மை நெகிழ்த்தி விடுகின்றன.
ராபர்ட் ஜெமெக் இயக்கி இருக்கும் இந்தப் படம் பிலிப் என்னும் அந்த சாகஸக்காரர் எழுதிய நூலின் அடிப்படையிலானது. பிலிப் பாத்திரம் ஏற்று நடித்த ஜோசப் கார்டான், ஆசானாக நடித்த பென் கிங்ஸ்லி இருவரும் பாத் திரத் தை உணர்ந்து நடித் திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு வணிக முயற்சியே. ஆனால் மையக் கதையும் சித்தரிப்பும் நம் வணிகப்படங்களின் செயற்கை மற்றும் மலிவுத் தனத்தை எடுத்துக்காட்டுகிறது. சாகசக்காரர்களை நாம் ஒரு வித பைத்திய மன நிலையிலேயே காண்கிறோம். முதல் முறையாக சற்று அருகே சென்று பார்ப்பதில் உள்ள அதிர்ச்சி மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு இரண்டுமே இந்தப் படத்தால் நமக்கு நிதரிசனமாக்கின்றன.
(image courtesy: animalnewyork.com)