புத்தன் பற்றிய கவிதை
சத்யானந்தன்
எதிரி நாட்டு
வீரன் மீது
கூர் வாளை
வீசிக் கொல்வது
வீரம் அல்லவா?
மிரளும் கண்களுடன்
மாமிச மலையாய்
ஓடி வரும்
காளையை விரட்டி
விரட்டி
வாலைப் பிடித்து
வளைத்து வளைத்து
திமிலைப் பிடித்து
முதுகில் ஏறி
அடக்கி நிமிர்வதை
விட
வீரம் எது உண்டு?
வீரம் மட்டுமா?
நேயமுமுண்டு
என்
வளர்ப்பு மிருகம்
பசியால் வாடினால்
மற்றொரு மிருகத்தின்
சதைத் துண்டுகளை
அறுத்துத் தருவேன்
இரு முகம்
பல முகம்
நிஜத்தில் முடியுமா?
அதனால் தான்
முகமூடிகள்
உள்ளே இருப்பது
புத்தன் முகம்
(flickr.com)