காந்தியடிகள் ஏன் நேருவைத் தம் வாரிசாகக் கண்டார்?
தமிழ் ஹிந்துவில் இன்று (15.11.2015) சமஸ் எழுதியுள்ள கட்டுரையில் நேருவையே ஏன் காந்தியடிகள் தமது வாரிசாக்கினார் என்பது பற்றிய விரிவான கட்டுரையின் மையம் காந்தியடிகள் நேருவுக்கு எழுதிய ஒரு கடித்தத்தின் பகுதி:
——————————
இரண்டாவதாக, நம்மில் எவரும் தம்மை உபயோகமற்றவர் என்று கருதவில்லை. நாம் இருவரும் இந்தியாவின் சுதந்திர லட்சியத்திற்காகவே உயிர் வாழ்கிறோம். அதற்காகவே நாம் இருவரும் மகிழ்ச்சியுடன் உயிர் துறப்போம். உலகத்தின் புகழுரை நமக்குத் தேவையில்லை. உலகம் நம்மைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும், நாம் அதைப் பொருட்படுத்தப்போவதில்லை. தொண்டுபுரிவதற்காக நான் 125 வயது வரையில் உயிர் வாழ விரும்புகிறேன். இருந்தாலும் இப்போது நான் கிழவனாகிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என்னைக் காட்டிலும் நீங்கள் மிகவும் இளைஞர்.
அதனாலேயே உங்களை எனது வாரிசு என்று குறிப்பிட்டிருக்கிறேன். இருந்தாலும் நான் என்னுடைய வாரிசை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்; என்னுடைய வாரிசும் என்னை நன்குப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் எனக்கு மனத் திருப்தி ஏற்படும்.”
—————————-
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல மாபெரும் தலைவர்கள் பற்றி நமது மேம்பட்ட புரிதலுக்கும் இளைய தலைமுறை தெரிந்து கொள்ளவும் இந்தக் கட்டுரைகள் உதவுகின்றன.
கட்டுரைக்கான இணைப்பு இது.