ஜெயமோகன் பார்வையில் “வைரமுத்து சிறுகதைத் தொகுதி”


vairamuthu1xx

ஜெயமோகன் பார்வையில் “வைரமுத்து சிறுகதைத் தொகுதி”

முதலில் ஜெயமோகன் வைரமுத்து சிறுகதையையோ அது வெளியிடப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியையோ சாடவில்லை. இதன் வாயிலாக நவீனத்துவ காலகட்டத்தில் சிறுகதை வந்துள்ள தூரத்தை நமக்கு நினைவு படுத்துகிறார். வைரமுத்துவுக்கு மட்டுமல்ல சிறுகதை முயற்சிக்கிறவர்கள் யாருக்குமே இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளது.

கட்டுரைக்கான இணைப்பு ————– இது.

கட்டுரையின் முக்கியமான பகுதி கீழே:

—————————————-
சென்ற நூறாண்டுக்கால உலகச்சிறுகதை மரபு சிறுகதைக்குரியவை என சில பண்புகளை வரையறை செய்துள்ளது. ஒன்று, குறிப்பமைதி. சிறுகதை சொல்வதை விட உணர்த்தவேண்டும். அது முடிந்தபின்னர் தொடங்கி வளரவேண்டும். அதன் புனைவுப்பரப்பின் இடைவெளிகளில் எல்லாம் வாசகன் நிரப்பும் வாழ்க்கை இருக்கவேண்டும்
இரண்டு கூற்றமைதி. சிறுகதையின் மொழி ஓசையிடக்கூடாது. இயல்பான கூறுமுறை கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால் சிறுகதை தன்னளவில் நவீனத்துவ இலக்கிய அலையின் உருவாக்கம். மொழியடக்கம் என்பது அதன் இயல்பு. அது சுருக்கம் அல்ல. நேரடியான சுருக்கமென்பது கலைக்கு எதிரானது. தட்டையான குறைத்துக்கூறலும் அல்ல. அது செறிவான நேரடி மொழி
[அந்த இயல்பை மீறும் அடுத்தகட்டக் கதைகள் தத்துவ விளக்கத்திற்ககாவோ, படிமச்செறிவுக்காகவோ , உன்னத உளநிலைகளை மொழியில் தொடுவதற்காகவோ அவ்வியல்பைக் கொள்கின்றன. ]
மூன்று, வடிவ அமைதி. சிறுகதை ஒரு பயன்பாட்டுக்கருவி போல தன் வடிவை அடைந்திருக்கவேண்டும். தேவையற்ற எதுவும் அதற்குச் சுமையே.
இப்பண்புகள் இக்கதைகளில் பெரும்பாலும் இல்லை. ஓசையிடும் மொழிநடையும் கூறவந்ததை எடுத்து எடுத்து முன்னால்வைக்கும் தன்மையும் கொண்டுள்ளன. சிறுகதைகளின் அமைப்பு மிகச் சம்பிரதாயமாக, முடிச்சுகள் வழக்கமானவையாக உள்ளன. தமிழின் நல்ல சிறுகதைகளை வாசித்த வாசகனுக்கு இவற்றில் அடைய ஏதுமில்லை
————————————

மூன்றாவதாக ஜெயமோகன் குறிப்பிடும் வடிவ அமைதி என்பது மிகவும் முக்கியமானது. ஒரு கதை ஒரு கரு ஒரு திருக்கிடும் திருப்பம் அதைவிட திடுக்கிடும் முடிவு என்று சிறுகதைக்கு ஒரு வடிவம் இருப்பதாகவே பல எழுத்தாளர்களே நம்பி வருகிறார்கள்.

நாம் அதைத் தாண்டி விட்டோம் வாசகராகவே. இன்று ஒரு கதையை சுவையாகச் சொல்லி அதை பத்து பேர் கேட்க ஒரு எழுத்தாளன் தேவையே இல்லை. அலுவலகத்தில் வீடுகளில் மக்கள் கூடும் இடங்களில் மிகவும் சுவையாக ஒரு கதையைச் சொல்ல யாராலும் முடியும்.

எனவே கதை சொல்வது என்னும் வடிவம் இல்லை. பின் என்ன வடிவ அமைதி. என்ன வடிவம் இருக்க வேண்டும்? வடிவத்தை எழுத்தாளன் அல்ல கதையே தீர்மானிக்கும். கதை தான் இல்லை என்று சொன்னாயே? ஆமாம் கதை என்று பெயர் அவ்வளவு தான். கதை சொல்லுதல் கிடையாது. எல்லாக் கேள்விக்கும் விடை சொல்லும் முயற்சியே கிடையாது. எனக்கு பதில் தெரியவில்லை. ஆனால் நான் அந்த உறுத்தலைப் பதிவு செய்கிறேன். எனக்கு நல்லவன் ஜெயிப்பான் தர்மம் ஜெயிக்கும் என்னும் உபதேசம் சொல்லும் விருப்பமில்லை. தர்மம் அதர்மம் எது என்று இன்று வரையறுக்க முடியாது அதைப் பதிவு செய்கிறேன். எப்ப்போதும் வறுமையும் அறியாமையும் இயலாமையுமாக சபிக்கப் பட்டவனைப்பார்த்து என் ஆத்திரத்தைப் பதிவு செய்கிறேன். ஆனால் அது கதையின் இயல்பான உரையாடலில் அமைதியாய் வாசிப்பவன் மனதை ஆழ ஊடுருவவதாய் பிரசார வாடையின்றி இருக்கிறது.

சிறுகதை தனிமனித கதாபாத்திரங்களை மிகையாய் வர்ணித்து உங்கள் மனதில் ஒரு பிம்பம் உருவாக்க முயற்சிப்பதே இல்லை. அது எழுத்தாளனின் வேலையே அல்ல. “காலை மணி பத்து இஸ்திரி போடுபவர் கட்சி ஊர்வலத்தில் என்ற ஒரு வர்ணனை அவர் மற்றும் சமூகச் சூழல் இரண்டையும் சேர்த்து விளக்கி விடும். மிகை தேவையே இல்லை. தனிமனிதனின் முரண்கள். சமூகத்தின் குரூரம் இரண்டுமே நவீனத்துவத்தின் களன்கள். கதாநாயகன், வில்லன், கதாநாயகி, தலைவன், தலைவி, தோழி இந்த மண்ணாங்கட்டிக்கெல்லாம் இடமே இல்லை. கூற்றமைதிக்கும் இதுவே பொருத்தம்.

மொழியமைதி அது என்ன மொழி அமைதி. தருமமிகு சென்னை என்று ஆரம்பித்தால் முடிந்தது கதை. கம்பீரமான மலைக்கோட்டை அருகே கடைத்தெருவில் என்றால் ஒழிந்தது. இதெல்லாம் தேவையே இல்லை. நான் சென்னை புகழ் திருச்சி புராணம் பாடப் போவதே இல்லை. என் கதை இந்த ஊர் என்பது ஒரு சில காரணத்துக்காக..

இறுதியாக அது முடிந்த பின் தொடங்கி வளர வேண்டும். அது என்ன முடிந்த பின் தொடங்கி வளருவது? கதையின் முடிவுக்குப் பின் நம் மனதில் ஓடும் சிந்தனையோட்டம். உண்மையில் நவீனத்துவத்தின் ஆகச் சிறந்த கூறு அல்லது அம்சம் இது.

பல நாட்களுக்கு அந்தக் கதையின் தொடர்ச்சியான பல சிந்தனைகள் கண்டிப்பாக நம்முள் நிகழும்.

நவீனத்துவத்தின் இந்த அம்சங்களுடன் செய்யப்படும் முயற்சிகளில் எல்லா முயற்சிகளுமே எதிர்பார்த்த வெற்றி பெறுவதில்லை. ;இருந்தாலும் நவீனத்துவத்தின் அங்கமாக அது அமையும்.

நவீனத்துவத்தில் சிறுகதையில் ஒரு படைப்பாளி தன்னம்பிக்கை ஒளிர நடை போடுவது வெளிப்படும்.
நாவலில் அவன் ஒரு சிற்பியின் வேலையை பிரம்மாண்டமாய்ச் செய்திருக்கும் கலை வெளிப்படும்.
கவிதையில் அவன் ஒரு குழந்தையின் மழலையில் நம் நெஞ்சை ஊடுருவும் கூர்மையான பார்வையை வெளிப்படுத்தும் பரவசம் காணக் கிடைக்கும்.

நவீனத்துவ வடிவம் புரியாததா? இது பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தொடர் கட்டுரை and tagged . Bookmark the permalink.

One Response to ஜெயமோகன் பார்வையில் “வைரமுத்து சிறுகதைத் தொகுதி”

  1. baskar says:

    நல்ல தொடக்கம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s