சிறு குறுந்தொழில்களே வேலை வாய்ப்பை உருவாக்கும் – தினமணி கட்டுரை
வேலைவாய்ப்பு, அன்னிய முதலீடு இந்திய மற்றும் உலகப் பொருளாதார நிலை பற்றி ஒரு விரிவான தினமணி கட்டுரைக்கான இணைப்பு ———- இது.
அரசாங்கம் வேலை தருபவராக முன்னோடியாக இருந்த காலம் மாறி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அரசு நிர்வகிக்கும் ஒழுங்கு செய்யும் வேலையை செவ்வனே நிறைவேற்ற அதிக ஊழியர் தேவையில் லை. தேவைக்கு மேல் இருந்தால் வரிச்சுமை ஏறவும் செய்யும். தனியார் துறையில் சிறு குறுந் தொழில்கள் வளர்வதே சிறு நகர கிராமப் புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும். கட்டுரையில் திறன் மேம்படுத்துதல் பற்றிக் குறிப்பில்லை. திறன்மிகுந்த அதாவது இயந்திரம், கட்டுமானம், மென்பொருள் ஆகிய துறைகளில் அடிப்படைத் திறன் உள்ள ஊழியர் கிடைக்கும் சூழலே பல தொழில்களுக்கு வழி வகுக்கும். திறன் வளர்ப்பதை அரசும் தனியாரும் உயர்நிலைப்பள்ளியிலேயே துவங்கலாம். மூன்று நான்கு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
(image courtesy: wiki)