சென்னை வெள்ளம் – காரணங்கள்- தீர்வுகள்- தமிழ் இந்து இரு கட்டுரைகள்
ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் மற்றும் நட்பு வட்டம் எங்குமே வெள் ளம் குறித் த கவலையும் ஆத் திரமும் மிகுந்த விவாதங்களைக் கேட்கிறோம். தமிழ் இந்து நாளிதழின் 8.12.2015 இதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி உள் ளன.
முதலாவது வி.தேவதாசன் கட்டுரை செம்பரம்பாக்கம் ஏரி பற்றியது. அது திறந்து விடப்பட்ட சூழ்நிலை பற்றிய நிர்வாக விளக்கத்துடன்.
அதற்கான இணைப்பு ——– இது.
அடுத்தது டி.எல். சஞ்சீவ குமாரின் “வாருங்கள் சென்னையைக் காப்போம்” என்னும் கட்டுரை. ஒரு தொடராக வரும் இந்தக் கட்டுரையின் இன்றைய பதிவில் அடையார் உட்பட்ட சென்னை நதிகளின் முகத் துவாரம் தூர்வாரப்பட வேண்டியதின் முக்கியத்துவம் வலியுறுத்தப் படுகிறது. சென்னை பற்றி அக்கறை உள்ளோர் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. அதற்கான இணைப்பு —— இது.
மக்களுக்கு அக்கறை இல்லாத ஒன்றை அரசோ அரசியல்வாதியோ முன்னெடுக்க வாய்ப்பே இல்லை. மறுபடி ஒரு பேரழிவு வேண்டாம் என்பது எல்லோரின் விருப்பமே. ஆனால் அது அற்புதத்தில் நிகழப் போவதில்லை. மக்கள் விவாதித்துத் தெளிந்து விழிப்புணர்வோடு அரசியல்வாதியின் வருங்காலத் திட்டமாக மாற வேண்டும்.
(image courtesy: wiki)