விதிகள் செய்வது
சத்யானந்தன்
எந்த ஒரு விவாதமும்
நிறைவடைவதில்லை
முற்றுப் பெறுகிறது அவ்வளவே
எந்த இடத் தில் அது நிறுத்தப் பட்டது
பின்
எந்த வடிவில் மேலெடுக்கப்பட்டது
என்னும் புரிதலில்
நான் பலமடைந்தேன்
இந்த பலத்தைப்
பிரயோகிக்கும்
தருணத்தை ஆளை சூழலைத்
தேர்ந்தெடுப்பதில்
நான்
அரசியல் புரிந்தேன்
அரசியல் என்பது
விதிகளை வகுப்பதில்
மேற்கை ஓங்குதல்
என்னும் தெளிவுடன்
அதனாலேயே
விளையாடத் துவங்கும்
முன் குழந்தைகள்
விதிகள் வகுக்கும் போது
அவதானிக்கிறேன்
(image courtesy: wiki)
(6.12.2015 திண்ணை இதழில் வெளியானது)