அப்துல் கலாம் நினைவிடம் – ஆடுமாடுகள் அரவணைப்பிலா இருக்க வேண்டும்?
ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அப்துல் கலாம் நினைவிடம் ஆடுமாடுகள் கூடும் இடமாகவும் பாதுகாப்பே இல்லாமல் மக்கள் மிகவும் நெருங்கிச் செல்லும் இடமாகவும் ஆகி வருவதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். அப்துல் கலாம் எல்லாத் தரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர். இளைஞர்கள் குழந்தைகள் சிறந்த குடிமக்களாக உயரும் கனவுகளைச் சுமந்தவர். அவரது மரணத்தின் போது ஒவ்வொரு தெருவும் பள்ளியும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது அவர் தம் மீது காட்டிய அன்பை முன் வைத்தே ஆகும். அவரது நினைவிடம் இன்னும் பாதுகாப்பாக்கப்பட்டு, உடனடியாக அங்கு கட்டிடப் பணி கூட நம்மால் செய்ய முடியாது என்றால் அவர் காட்டிய வழியில் போவது கிட்டத்தட்ட இயலாத காரியமே. உடனடியாக அந்த இடம் பாதுகாக்கப் பட்டு நினைவு மண்டபம் நிறுவப்படும் என நம்புவோம்.
(image courtesy:twitter)