ஞானத்தின் ஸ்தூல வடிவம்
சத்யானந்தன்
போதி மரம்
மட்டுமல்ல
பசுமை எங்கும் நிறைந்த
வனம் அது
இரையுண்ட
வேட்டை விலங்கு
மீத்திய
மானின் உடல்
ஒரு நாளுக்குள்
உயிர்ப்பை வண்ணமாய்க்
காட்டிய
பட்டாம்பூச்சிகள்
உதிரல்களாய்
தாவுவதும் நிலைப்பதும்
ஓன்றே
என்னும் குரங்குகள்
இயக்கமும்
காட்டாறு
தீட்டிய கூழாங்கற்களின்
மௌனமும்
மனிதனின் கலை
ஒரே ஒரு இடத்தில்
தலையில்லாமல்
தியானிக்கும் புத்த வடிவம்
அகம் அழிந்த நிலையின்
மிக அண்மையான
சித்தரிப்பாய்
(27.12.2015 திண்ணை இதழில் வெளியானது)
(image courtesy: shutterstock)