ஜெயந்தி சங்கரின் ‘பறந்து மறையும் கடல் நாகம்’ நூல் வெளியீடு
சீன வரலாறு, பண்பாடு, பெண்கள் மற்றும் சமகால வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதலை அளிக்கும் நூல் ‘பறந்து மறையும் கடல் நாகம்’. பல்லாண்டு உழைப்பில் ஆராய்ச்சியில் ஜெயந்தி படைத்திருக்கும் அரிய நூல் இது.
நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூலகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பு ‘பறந்து மறையும் கடல்நாகம்’
பறந்து மறையும் கடல்நாகம்
வெளியீடு: காவ்யா
16, 2nd Cross Street,3rd floor,
Trustpuram, Kodambakkam,
Chennai 600 024
பக்கம்: 1038
விலை ; ரூ. 999
இந்த நூலின் முதல் வாசகர்களில் ஒருவனாக நான் நூல் அறிமுக உரையை திருவான்மியூர் சென்னை “பனுவல் புத்தக நிலையத்தில்” நிகழ்த்துகிறேன். வாசகர் அனைவருக்கும் இது அழைப்பிதழ். திருவான்மியூர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகே புத்தகக் கடை இருக்கிறது. 1.1.2016 மாலை 5.30 மணிக்கு விழா துவங்குகிறது.