மாணவர்களின் மன அழுத்தம் – தற்கொலைகள் நம்மை பாதித்தனவா?
நாடாளுமன்றம் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் தற்கொலைகள் பற்றி விவாதித்திருப்பது மிகவும் முக்கியமானது. நம்பிக்கை தருவது.
தினமணியின் கட்டுரை (உதயை மு. வீரையன்- 2.1.2016) இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது:
————————————————–
உயிர் வாழ ஆசைப்பட வேண்டிய வயதில் தற்கொலையைத் தேர்வு செய்வதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?
மாணவர்களுக்கு மன அழுத்தமும், மனச்சோர்வும் ஏற்படுவதற்குக் காரணம் கல்வி வணிகமாக மாறியதுதான் என்று கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். “மாதா பிதா குரு தெய்வம்’ என்ற நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
கல்வி என்பது மனவளமும், பண்பாடும், ஒழுக்கமும் கற்றுத் தருவதுதான் என்ற நிலை மாறி, கல்வி என்பது பணம் பண்ணுவதற்கான புதிய கருவி என்ற நிலை உருவாகிவிட்டது. கல்வி இப்போது கடைச்சரக்காகி விட்டது. முயற்சியும், உழைப்பும் இல்லாமல் வாங்கும் பொருளாக நிலை தாழ்ந்துவிட்டது.
பெற்றோரின் பேராசைக்குத் தீனி போடும் நிலையங்களாகத் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக கசக்கிப் பிழியப்படுகின்றனர்.
அவர்கள் விரும்பாத பாடத்தை பெற்றோரின் கட்டாயத்துக்காகப் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களின் இளமைக்கால விளையாட்டு வாழ்க்கையே பறிக்கப்படுகிறது. அவர்களது சிரிப்பும், கும்மாளமும் எங்கே போனது?
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார். “உங்கள் குழந்தைகளிடம் அன்பைக் கொடுங்கள். உங்கள் எண்ணத்தை விதைக்காதீர்கள். அவர்கள் தங்கள் எண்ணத்துடன் வளரட்டும்’.
அவர்களது குழந்தைகளாகவே இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் திணிப்பது வன்முறையேயாகும். வன்முறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிள்ளைகள் சுதந்திரமாக வளர்வதைப் பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.
————————————-
பல முறை ஊடகங்கள் விவாதித்திருந்தாலும் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் மனப்பாங்கில் அணுகுமுறையில் பெரிய மாற்றம் இல்லை. பெரிய சோகம் இது.
கட்டுரைக்கான இணைப்பு ———– இது.
(image courtesy:wiki)