மோகமுள் ளுக்குப் பிறகு தமிழில் நாவல்கள் வரவில்லை – ஆ.மாதவன்
இப்படி தமது பேட்டியில் சாகித்ய அகாதமி விருது பெற்ற மூத்த எழுத் தாளர் ஆ.மாதவன் தினமலருக்கான பேட்டியில் கூறி இருக்கிறார். நேர்காணலுக்கான இணைப்பு — இது.
92 வயதாகும் அவர் இலக்கியத் தில் உண்மையான ஈடுபாடு உடையவர். வாசிப்பில் அவர் சமகால இலக்கியங்களைப் புறந்தள்ளி இருக்கிறார் என்பதே இப்படி ஒரு மேலோட்டமான பார்வைக்குக் காரணம். இந்தக் குறை அவரிடம் மட்டுமல்ல, ஜெயகாந்தனிடமும் இருந்தது. நாவலின் நீளம் பற்றிக் குறிப்பிடுகிறார். உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கும். அசோகமித்திரனின் நாவல்கள் நீண்டவை அல்ல. ஆனால் ஆழ்ந்த உட்பொருளுடன் அந்தப் படைப்பின் வடிவை மீறி மேற்சென்று நம் சிந்தனையைத் தூண்டுபவை. வாசிப்பில் படைப்பாளிகளுக்கே அதிக ஆர்வமிருப்பதில்லை. அப்படியே வாசித்தாலும் விமர்சிக்க முன் வருவதில்லை. சமகால இலக்கியம் ஆளுமை அடிப்படையில் அணுகப்பட இதுவே காரணம். தேக்க நிலைக்கும்.