மீள் வருகை
சத்யானந்தன்
வெய்யில் முகத்தில்
சுட்டு
எழுப்பி விட்டது
குதிரையைத் தேடின விழிகள்
செங்குத்து மலையில் நேற்று எங்கோ
புரவி நின்று விட்டது
நினைவுக்கு வந்தது
இரவில் அவள் தென்பட மாட்டாள்
ஆனால் தேடி வருவதற்குள்
பொழுது சாய்ந்து விட்டது
அவளே ஒரு கனவோ?
இல்லை. நெஞ்சில் இருந் து
வாளை உருவி அவள் ஆற்றிய
புண் தழும்பாயிருந்ததே
கவசங்களைக் கழற்றினான்
உடைவாளையும்
முன்கைக் காப்புப் பட்டைகளையும்
நெஞ்சில் தழும்பு இருந்தது.
கனவல்ல
உடன் எதிர்ப்பட்டாள்
“ஆயுதங்களை நீக்கினால் தான்
நீ வருவாய் என்னும்
புரிதல் இப்போதே நிகழ்ந்தது”
“நான் ஒரு கனவு
மறுபடி வரமாட்டேன்
என ஏன் நினைத்தாய்?”
அவள் புன்னகையில்
மலை மூழ்கியது
(10.1.2016 திண்ணை இதழில் வெளியானது)
(image courtesy: pininterest.com)